பக்கம்:கங்கா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கங்கா


இடை வாசற் சந்திலிருந்து காற்று சில்லென கூடத் துள் சீறிற்று. விளக்கு மிதந்தது. சுவர்களில் எங்கள் நிழல்கள் எங்களைவிட மிகப் பெரிதாய் ஆடின. "இதென்ன பச்சைக் குழந்தைகள் மாதிரி !" மெத் தென்று சாவித்திரியின் குரல்தான் அந்த நிலையை நிதானத்துக்குத் திருப்பிற்று. அவள் சொல் கேட்டதுமே, கோல்பட்ட மாதிரி கஸ்தூரி படமொடுங்கிப் போனான். மிகவும் பணிவான குரலில், "மன்னி சொன்னால் சரி” என்றான். சாவித்திரி இடதுகை வளையல்களை வலது கையால் நெகிழ்த்துக் கொண்டாள். மடிமேல் படிந்த கைகளின் மேல் அவள் தலை குனிந்தது.அதன் கருமை விளக்கொளி யில் பளபளத்தது. கூந்தலின் சிற்றலைகளைப் பிளந்து கொண்டு வகிடு நடு பிறழாமல் 'விர்'ரென ஒடிற்று. மேனி உள்செழிப்பில் மினுமினுத்தது. நான்கு மாதங்களாக ஸ்நானம் பண்ணவில்லை. "இரு தாயந்தான்" அவள் பேச்சு மூச்சுக்கு மேல் எழவில்லை. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இதென்ன கட்சியை விட்டுக் கொடுக்காமல் ‘குஞ்சர: வா? கூடவே எனக்குச் சந்தேகமும் குழப்பமும் வந்து விட்டன. நான்தான் முட்டாளோ ? நிஜமாவே இரு தாயந்தானா? மங்கையின் பார்வை எங்கள் மூவர்மேலும் மாறி மாறி நிலைக்க இடங்கொள்ளாது தவித்தது. அவள் புருவங்கள் நெறிந்தன. மோவாயும் உதடுகளும் நடுங் கின. கையை வீசி காய்களைக் கலைத்துவிட்டு, சரே லென எழுந்து இடை வாசல் வழி ஓடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/92&oldid=1283308" இலிருந்து மீள்விக்கப்பட்டது