பக்கம்:கங்கா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

79


நட்சத்திரச் சுடர் போலும், காலும் கையும் அகலப் பரப்பித் தூங்கிக்கொண்டிருந்த கிட்டுவைச் சாவித்ரி துரக்கித் தோள்மேல் சாத்திக்கொண்டு மாடி ஏறினாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "ஏம்பா இவர்கள் இப்படியிருக்கிறார்கள் ?" "யார் கண்டது? பெண்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது ?” வீடு என்பது கூட மறந்து அவன் உதடுகளில் ஒரு சிகரெட் ஆடிற்று. குவிந்த கரங்களுள் சுடரையணைத்துச் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். பசு நாக்குப்போல் முன்மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது, விழிகளின் மேல் இமைகள் கவிந்து முகத்தில் இரு நீண்ட கீறல்களாயின. ★ 'அப்பா பச்சிக்கதப்பா" என முனகிக்கொண்டுவந்து கிட்டு மடியில் விழுந்தான். அவனைத் துாக்கிக் கொண்டு எழுந்து சமையலறை யில் எட்டிப் பார்த்தேன். அடுப்பெதிரே முழங்காலைக் கட்டிக்கொண்டு அவள் உருவம் அறையின் பாதியிருளில் மங்கலாய்ப் பிதுங்கிற்று. அடுப்பு துரங்கிற்று உட்கார்ந்தபடியே அவளும் தூங்கு கிறாளா ? இன்று காலையிலிருந்தே அசதியாய்த் தானிருக்கிறாள். இடுப்பு இப்பவே அகல ஆரம்பித்து. விட்டது. ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமைதான். "கிட்டு, உனக்கு இட்லி பிடிக்குமோ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/93&oldid=1283309" இலிருந்து மீள்விக்கப்பட்டது