பக்கம்:கங்கா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கங்கா


"ஒ இக்கிலி புக்குமே :- இக்கிலி, தட்டணி, அளுவா எல்லாம் புக்குமே !” "ஹோட்டலுக்கு வரையா?” "நான் வரேம்பா நான் வரேன் !! பூனிலே குத்திக் குத்தித் தாப்படலாமாப்பா?” "அது யாருடா சொல்லிக் கொடுத்தது?" "கச்சூவி மாமா சொல்லிக்குத்தாளே !” நநீங்கள் கிளம்பினோம். மேகங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய்த் தம்மையடுக்கியிழைந்து ஒ ன் ற - ய் க் குழுமிக்கொண்டிருந்தன. மழை எட்டு ஊருக்குக் காத் திருந்தது. கொஞ்சம் வேகமாய் மிதித்தால் பொட்டலத் துட்ன் திரும்பிவிடலாம். சாவித்ரிக்கும் சேர்த்துத்தான். சமையல் ஏறத்தாழ ஆகலாமே ! இன்று ஞாயிற்றுக் கிழமை தான். சாவித்ரி இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை அவளுக்கே இந்தத் தடவை இப்பவே தள்ளவில்லை. பிறந்த வீட்டுக்கு அனுப்பலாமா என்றால் அவள் அண்ணனுக்கு நாலு குழந்தைகள். அவள் மன்னி மறுபடியும் உண்டாயிருப்பதாகக் கேள்வி. அவள் அங்கு இ)ாதமாட்டாள். ஏற்கெனவே பேச்சுவாக்கில் ஒரு சமயம் சொல்லியிருக்கிறாள்; "பெற்றவர்கள் போனபின் பிறந்த வீடு ஏது ?” சாவித்ரி பேசினால் கல் பேசின மாதிரி. எங்களுக்கு மணமாகி முதன்முதலாய் அவள் பேசிய வார்த்தைகளே போதும். நான் ஊருக்கு கிளம்புகையில், வாசற்கதவு மூலையிருட்டில், தாழ்ப்பாள் மேல் தங்கிய என் கைமேல் அவள் கை பொத்திற்று. அவள் மூச்சு என் கன்னத்தின் மேல் அனல் கக்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/94&oldid=1283310" இலிருந்து மீள்விக்கப்பட்டது