பக்கம்:கங்கா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரளயம் நான் என்னை வெறுக்கும் வெறுப்பில், என்னை மறந்த வெறியில், வானை நோக்கிக் கைகளைக் காட்டிப் பழித்து இழைத்த சாபங்களே உருவாயின போலும், இதுவரை தூயதாய்த் துலங்கிய வானில், கருமேகங்கள் திரளத் துவங்கின, அவை எங்கிருந்து, எப்படி, எப்பொழுது, அப்படி வந்தன ? எதிரில் ஒரு வரும் இல்லையென்று நான் என்னுடனேயே என்னைப் பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்ததுமே எண்ணங்கள் பெருக்கெடுத்து விட்டன. அவை போன வழி என்னை இழுத்துச் சென்றதில், நான் செல்வழியும், என்னைச் சுற்றி இருந்தனவும் நேர்ந்தனவும் மறந்தன. நானே என் எண்ணங்களை அடைத்துக் கொண்டிருந்ததில், மற்றவை மறைந்தும் போயின. அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என் னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன் மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைத் தானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை. அவளை அவள் ஊருக்கு அழைத்துச் சென்ற ரயிலை வெறுத்தேன். அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த அவள் வீட்டாரை வெறுத்தேன். பச்சைக் கொடி காட்டி மணியடித்து, வண்டியைத் துரிதப்படுத் திய ரயில் சிப்பந்திகளை வெறுத்தேன். என்னை ஏளனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/98&oldid=764481" இலிருந்து மீள்விக்கப்பட்டது