பக்கம்:கங்கா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

85

. செய்த புகை வண்டி ஊதலை வெறுத்தேன். அவள் புன்னகையின் மயக்குக்கே முழுப் பங்கென நான் நினைக்கும் அவள் தத்திப்பல், இப்போது பிரியும் சமயம் அவள் சிரித்த சிரிப்பில் தோன்றியதும் அதையும் வெறுத்தேன். பிரிவு தாங்காது என் முகத்தில் குறு. குறுத்துக் குழம்பிய ரத்தச் சிவப்பை வெறுத்தேன். இப் பிரிவுக்குக் காரணமாயிருந்த என் வித்தை வெறுத்தேன். இதுபோலவே நான் உண்டான போதும் என் தகப்பன் என்னை வெறுத்திருப்பான் என்று நினைக்கையில், என் தகப்பனை வெறுத்தேன். அவனைப் பார்த்து சிரித்திருந் திருக்கும் தாயை வெறுத்தேன். பிறகு, உலகில் நான் வெறுக்காதது எதுவும் இல்லை. இம்மாதிரி நேரும் என்று நான் நினைக்கவில்லை. இம்மாதிரித்தான் எல்லோருக்கும் நேருகிறது என்பதை யும் நினைக்கவில்லை. இம்மாதிரி நேராவிடில் நானே நேர்ந்திருக்கமாட்டேன் என்பதையும் நினைக்கவில்லை. என்னைப் பற்றி மாத்திரம்தான் நினைத்தேன். இந்த "என் என்' என்று என்னுள்ளிருந்து என்னை ஆட்டு வித்த எந்த 'என்னை நான் வெறுத்தேன் ? மண்டை யெரிச்சலில் எண்ணங்களின் உருக்களும் சவுங்கிக் குழம்பின. திடீரென ஒன்றும் இரண்டுமாய்த் துறல்கள். உடனே மடமடவெனக் கொட்டவும் ஆரம்பித்துவிட்டது. கோடை மழை ஒவ்வொரு துளியும் ஒரு வெள்ளத்தின் அம்சம். திக்குமுக்காடி ஒதுங்க இடந் தேடுவதற்குள், கணுக்கால் ஆழத்திற்கு வெள்ளம் காலடியில் மண்ணைப் பறித்துக் கொண்டு ஓடிற்று. வேரோடு பிடுங்கிக் கொண்டு, ஜலத்தில் அடித்துக் கொண்டு வந்த ஒரு கொடி காலைச் சுற்றிப் பின்னிற்று. ஜலம் கோபக் கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்துக் காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று. என் கண்கள் இடந்தேடி உருகிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/99&oldid=1283313" இலிருந்து மீள்விக்கப்பட்டது