பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் என்ன சொன்னார்?

101


 தோன்றி அறம் உரைக்கின்றனர். சிலர் கூறிய அறங்களே பிற்காலத்தில் பெருஞ்சமயங்களாய் மாறிவிடுகின்றன. ஆனால், அவ்வாறு மாறிய சமயங்கள் சில காலங்களில் வெறி கொண்டு, ஒன்றை ஒன்று தாக்கவும் முற்படுகின்றன. எனவே, அடிப்படையான சமரச உணர்வை அவ்வப்போது வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. கம்பர் அத்தகைய தேவையை உணர்ந்தார். உணர்ந்து, சமரச உணர்வைக் கூறுகின்றார். சாதாரண ஆற்றுப் பெருக்கின் மேல் வைத்துச் சமரச ஞானத்தைக் காட்டுகிறார் அவர். தொல்லையின் ஒன்றேயாய்ப் பின் பரந்த சமயங்களின் முடிவு அமைவதைப் போன்று ஆற்று வெள்ளம் அமைந்ததையும், அது கடலிடைக் கலந்ததையும் காட்டுகிறார் அவர். இதோ அவர் வாக்கு: -

'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருள்ஈது என்னத்
தொல்லையின் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே'

(ஆற்றுப். 19) இவ்வாறு அருள் நெறி பற்றி சமய நெறியில் சமரசங் கண்ட கம்பன், பொருள்நெறி பற்றியும் சமரசங்காண்கின்றர். இன்று நாட்டில் பொருளாதாரம் பற்றிய பேச்சுக்கள் எங்கும் பேசப் பெறுகின்றன. மக்களுக்குள் பொருளால் உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்றும், சமரச வாழ்றே அடிப்படையாக அமையவேண்டுவ தென்றும், அரசியற்றலைவர்களும் பிறரும் பேசுகின்றனர். 'சோஷியலிசம்' என்ற சமுதாய அடிப்படைத் திட்டமே நாட்டை வாழ்விக்க வல்லது என்று கூறுகின்றனர். அதற்கென, ஆளும் கட்சியினராகிய காங்கிரஸ்காரர்கள் தம் மாநாட்டைச் சென்னைக்கடுத்த ஆவடியில் நடத்தின காலத்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றினர். இந்திய நாட்டின் எப்பகுதியிலும் அக்கொள்கை நிறைவேற்றம் செய்யப் பெறவில்லை. அது நிறைவேறப் பெறத் தகுதி