பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?

105


உள்ளம் தளர்கின்றது. இராமனை நோக்கித் தன் தம்பி சுக்கிரீவனைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் உயர்ந்த மனிதப் பண்புக்கு அப்பாற்பட்டனவாய் அமைகின்றன. மரணப் படுக்கையில் உள்ள வாலி இராமனைப் பல வேண்டினான். இறுதியில்,

'இன்னம் ஒன்று இரப்ப துண்டால் எம்பியை உம்பி மார்கள் தன்முனைக் கொல்வித் தான்என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய்!

என்றும்,

அனுமன்என் பவனை ஆழி ஐய! நின் செய்ய செய்கைத்
தனுவென நினைதி மற்றென் தம்பிகின் தம்பி யாக
நினைதி ஓர் துணைவர் இன்னோர்அனையவர் இலைநீ ஈண்டு அல்
வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய்!

(வாலி வதை. 128, 132) என்றும் கூறும்போது அவன் குரங்குள்ளம் எத்தனை உயர்ச்சி பெற்று மனித உள்ளத்திலும் மேலாகச் செல்லுகின்றது! தன் தம்பிக்குத் தன்முனைக் கொல்வித்தான்’ என்ற பழிச்சொல் உண்டாகலாகாது என்று எத்துணைப் பரிவோடு பேசுகின்றன்! யாராவது பழித்தாலும் அதைத் தடுத்தல் இராமனுக்குச் கடன் என்பதையும் வற்புறுத்துகின்றனே! மேலும், அவனை அடைக்கலமாகத் தந்து, என் தம்பி நின் தம்பியாக நினைதி' என்கின்றானே! தன் சாவுக்கு மூலகாரணமான அனுமனைப் பற்றித்தான் எத்தனை புகழ்ச்சியாகப் பேசுகின்றன்! இத்தனையும் அவன் பண்பட்ட நல் உளத்தையன்றே காட்டுகின்றன? இத்தகைய உடன் பிறப்புணர்ச்சி இன்று மனித இனத்தில் இல்லையே! உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்ற பாடலும் அதற்கென இலக்கியங்களும் நாட்டில் எல்லையற்று வளர்ந்துவிட்டனவே! இந்த நிலையில் நாம் வாழக் கம்பர் சொன்ன இவற்றை மறக்க முடியுமா? இதைப் போன்றே மற்றொரு கொடியவகைக் கருதும் கும்பகர்ணனிடத்தும் உடன்பிறப்புணர்ச்சியைக்