பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?

107

உம்பரும் பிறரும் போற்ற ஒருவன்மூ வுலகும் ஆண்டு
தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனே தமியன் மண்மேல்

.
(கும்பகர்ணன் வதை. 157)

இதில் அவன் அண்ணனோடு இறந்து உடன்பிறந்தான் இன்றி இறந்தான்' என்ற அவச்சொல்லைப்போக்கத் தன் உயிரையே தியாகம்செய்த பெருவீரனுக அன்றே விளங்குகின்றான்! இவ்வாறு உயர்குலத்துப் பிறந்த மனிதர் எனப்பட்ட இராம பரதரிடத்தில் உள்ள உடன் பிறப்புணர்ச்சியை மட்டுமன்றி, கம்பர் அரக்கரிடத்தும் குரக்கரிடத்தும் மறைந்து நிறைந்துள்ள அந்த உடன் பிறப்புணர்ச்சியைக் காட்டத் தவறவில்லை. உண்மையில், தம் கருத்தொடு மாறுபட்டுத் தத்தம் வாழ்வுக்கு இறுதி தேடிய அந்த உடன் பிறப்பாளர்களைப் பற்றி வாலியும் கும்பகர்ணனும் கூறும் வார்த்தைகளால் அவர்கள் இராமன் பரதன் ஆகி யோரைக் காட்டிலும் எத்தனையோ பங்கு உடன் பிறப்பு உணர்ச்சியில் மேம்பட்டவர்கள் என்பதை விளக்கிவிட்டனரன்றே கம்பர். இடைவிட வேறு எவ்வாறு இவ்வுண்மையை எடுத்துக் காட்ட இயலும்?

மனிதன் தற்பெருமையை விழையாதவகை இருக்க வேண்டும். எத்தனை வகையில் உயர்ச்சி பெற்ற ஒருவனாலும், 'தான் தற்புகழ்தல் தகுதியன்று என்பது மனிதப் பண்பாட்டின் மேல்வரிச் சட்டம். ஆனால், இன்றைய மனிதரில் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்து போற்றுகின்றனர்? வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் வெற்றியைத் தாம் தேடியதாகத் தருக்கும் காட்சியைத் தனி மனிதனிடை மட்டும் அன்றித் தரணியை அடக்கியாள நினைக்கும் சர்வாதிகார அரசாங்கங்களிடத்தும் காண்கின்றோம். ஆனால், அது மனிதப் பண்பாடல்லவே! மனிதன் இவ்வாறு தன் பண்பாட்டினை இழந்து நிற்கும் அதே வேளையில் விலங்காகிய அனுமன் வழி அப்பண்பாட்டினை விளக்குகின்றார் கம்பர்.

சீதையைத் தேடி இலங்கை நகர் சென்று மீண்ட அனுமான், சீதை ஆண்டு உள்ளதை மட்டும் உணர்த்தி