பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து

         தடவியதோ ஒருவன் வாளி!’

என்ற பாடல் அவலச்சுவை பற்றியதாயினும், அதுதான் எத்துணைப் பண்பாட்டுடன் பீடு நடை போட்டுச் செல்கின்றது! இது போன்ற கம்பர் பாட்டுக்கள் எண்ணில. அவர் சொன்னவற்றை யெல்லாம் இவ்வாறு பகுத்துணர்ந்துகொண்டே செல்வோமாயின், அது மிக மிக விரிவாகச்சென்று கொண்டே யிருக்கும். எனவே, இன்னும் ஒன்றிரண்டு கூறி, என் உரையை முடித்துக்கொள்ளுகின்றேன்.

கம்பர் தாம் எடுத்துக்கொண்ட பாத்திரங்களை மனித இயல்புக்கு ஏற்பவே காட்டிக்கொண்டு செல்கிறார். இராமனைச் சாதாரண மனிதனாகவே அவர் காட்டுகின்றார். கடவுள் அவதாரம் என்று போற்றப்படும் இராமன் அவ்வாறு மனித நிலையில் இல்லையானால் இராமாயணமே இல்லை. அவன் கடவுளாக வருவதை அறியும் வகையில் வாழ்த்திருப்பானாயின், மாயமான் பின் செல்வனா? அன்றிச் சீதை சென்ற இடம் தெரியாது வானரங்களைத் தேட விடுவனா? மேலும், அத்தகைய துன்ப நிலைகளில் கண்ணீர் விட்டுக் கதறுவனா? எனவே, கம்பர் இராமனை மனிதனாகவே காட்ட விழைகின்றார். அந்த மனித உள்ளத்தே உயரிய பண்பாட்டைப் புகுத்தித் தமது கதைக்குத் தலைவனாக அவனை ஆக்கிக்கொண்டார். அவ்வளவே, சுக துக்கங்களில் பங்கு கொண்ட இராமன் நிலையைப் பலவிடங்களில் பேசுகின்றார் கம்பர்; ‘மெய்த்திருவந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும்’ அவன் உள்ள நிலையை,

‘மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்
சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை

ஒத்தி ருத்த முகத்தினை உன்னுவாள்.’