பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார் ?


என்று இலங்கையில் சீதை நினைத்ததாகக் கூறுகின்றார். பின்னும் அவ்விராமன் சீதையைப் பிரிந்து நைந்து நடமாடும் மனிதனாக உணர்வெலாம் ஒடுங்கி நின்ற நிலையை

‘இன்னுயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒத்தான்’

(உருக். 75)

என்கின்றார். மாயா சீதைப் படலத்தே அவன் வாட்டத்தை உச்ச நிலையில் காட்டுகின்றார் கம்பர்.

சித்திரத் தன்மை யுற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவப் பேசான்
பித்தரும் இறைபொ றாத பேரபி மானம் என்னும்

சத்திரம் மார்பில் தைக்க;உயிர் இலன் என்னச் சாய்ந்தான்.’
(60)

எனக் காட்டுவது கம்பர் பாட்டு. மற்றோர் இடத்தே அனுமன் சீதை தந்த அடையாளமான சூளாமணியைக் கண்ட காலத்து, இராமன் சாதாரண மனிதத் தன்மையனாகி நின்றதை வேறொரு பாட்டால் விளக்குகின்றார். சூளாமணியைக் கண்டதும்,

பொடித்தன ரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணிவாய் ஆவி வருவது போவது ஆகித்

தடித்தது மேனி என்னே யாருளர் தன்மை தேர்வார்?’
(திருவடி. 83)

இவ்வாறு இராமனை மனிதனாகவே கண்டார் கம்பர்.

இறுதியாக யாவரும் நல்லவரே என்று காட்டக் கம்பர் மேற்கொண்ட முயற்சியைக் கண்டு முடிப்போம். இராமாயணத்தை நினைத்தாலே நம் முன் ஒரு சிலர் மிகக் கொடியவராகக் காட்சி அளிக்கின்றனர். முதலில் கைகேயியைத் தான் கொடுமையுள்ளவளாக நினைப்போம். சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனை காட்டிலும் அவளைக் கொடி-

8