பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


இனி அரசர்களோடு கலந்து ஆயுள் முழுவதும் வாழ்ந்த புலவர் புகழேந்தியார், நளனை முன்னிறுத்தி நாடாளும் நல்லவர் எவ்வெவ்வாறு அறம் ஓம்பி மறம் கடிந்து ஆட்சி புரிய வேண்டும் என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றார். நாட்டில் ‘பகையும் பிணியும் பசியும்’ நீங்கி வாழ்தலே மெய்ம்மை தவறா அரசு ஆள்வதற்குச் சான்றாகும் என்று சங்க காலப் புலவர் பலர் பாடியுள்ளார்கள். அதை எண்ணிய புகழேந்தியார், நளனுடைய நிடத நாட்டில் பகையில்லை. எனவே, கிளியும் பருந்தும் ஒரே கூட்டில் வாழ்கின்றன. அதற்குக் காரணம் நளன் குடை நிழலமர்ந்து அறம் புரிவதே எனச் சிறப்பிக்கின்றார்.

‘சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்—மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு.’ (26)

என்பது அவர் பாடல். இன்னும் அரசன் மக்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை பற்றியும், அவன் எவ்வாறு தரணி ஆள வேண்டும் என்பதையும் புலவர் தடுமாற்றமில்லாமல் விளக்குகின்றார். மக்கள் அவனை அன்பால் போற்ற வேண்டுமேயன்றி, ஆணைக்கு அஞ்சி அடங்கியிருத்தல் கூடாது என்கின்றார். அந்நாட்டு மக்கள் நளனிடம் எவ்வாறு அன்பு கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்பல இடங்களில் புகழேந்தியார் காட்டத் தவறவில்லை. அவன் கானகம் செல்லும்போது மக்கள் அவன் மாட்டுச் சொரிந்த அன்பினை,

‘ஆருயிரின் தாயே! அறத்தின்: பெருந்தவமே!
பேரருளின் கண்ணே! பெருமானே!—பாரிடத்தை
யார்காக்கப் போவது நீ யாங்கென்றார் தம்கண்ணின்

நீர்வார்த்துக் கால்கழுவா நின்று.’

என்று உருக்கமாக விளக்குகின்றார். மக்கள் வாக்கில் அன்றித் தேவர் வாக்கிலும் நளன் பெருமையைக் காட்ட