பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


னிடம் கூறுகின்றான் அவன். ஆனால், நளனோ, அதற்குள் தேர் நெடுந்தூரம் சென்றுவிட்டதை உணர்த்துகின்றான். இந்த அமைப்பிலேதான் அவன் தேரோட்டும் திறன் விளக்க முறுகின்றது.

‘தத்து வாம்பரி நிறுவி அத் துகில்தரு கென்னப்

பத்து யோசனை கடந்தது தேர்எனப் பகர்ந்தான்.’

என்பர் நைடத நூலார். நம் புகழேந்தியார்,

‘மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே.’ (378)

என்று சுருக்கமாக முடித்துக் கொள்வார்.

இனி, அவன் மடைத்தொழிலை அவனுடைய மக்கள் வாக்கிலேயே காட்டும் நிலை சிறந்தது மட்டுமின்றி, நெஞ் சத்தையும் தொடுவதாகும். ‘அடு மடையா’ என்ன இரு பொருள்பட அவன் மக்களே அவனை விளிக்கின்றார்கள் தமயந்தியின் மறு சுயம்வரத்துக்காக, இருதுபன்னனுக்குத் தேர்ப்பாகனாகவும் சமையற்காரனாகவும் வந்த நளன், ஒரு புறம் சமைத்துக் கொண்டிருக்கின்றான். தமயத்தி அவன் நளன் தானா என்று அறிந்துகொள்ளப் பல வழிகளில் முயல்கின்றாள். அவற்றுள் ஒன்று மக்கள் இருவரையும் அவனிடம் அனுப்பியதாகும். தன் மக்களைக் கண்டு, வேற்றுருவில் இருந்த நளன் நைந்தான். ‘மக்காள், நீர் என் மக்கள் போல்கின்றீர்! யார் மக்கள்?’ என்று கேட்டான். அவர்களோ, ‘இந்நகர்க்கே வாழ்கின்றோம்; எங்கள் வள நாடு மற்றொருவன் ஆள்கின்றான்,’ என்று அழுது சொன்னார்கள். அது கேட்டு நிலை அழிந்தான் அவன். அவர் தம் உணர்வை அறிய, ‘உங்கள் நாட்டை வேறொருவன் ஆளவிடலாமோ?’ என்று கேட்டுவிட்டான். அது கேட்ட மக்கள் சினந்து,

‘நெஞ்சால் இம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்

அஞ்சாரோ மன்னர் அடுமடையா!—எஞ்சாது