பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வேண்டிய நிலையையும் குறிப்பாக உணர்த்துகின்றார். இந்த நாட்டில் இன்று தலை விரித்தாடும் பேதங்களையும் பிணக்குகளையும்,

‘வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்என்றால்

சூழ்கின்ற பேதம் அந்தத் தொகையிருக்கும்’

என்று அழகாக எடுத்துக் காட்டுகின்றார்.

இன்று உரிமை பெற்ற இந்திய நாட்டில் பேசப்பட்டு, வரும் சமதர்மக் கொள்கைகளை அவர் நன்கு போற்றி பொருள் ஒரு சிலரிடம் சேர்ந்து பயனற்றுக் கெட்டு அழிவதைக் காட்டி வருந்திப் பாடிய பாடல்கள் பல. இன்று இந்திய அரசாங்கம் அமைதியான முறையிலேயே சட்டசபைகளில் சட்டங்கள் இயற்றுவதன் மூலமே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகளை மாற்றிச் சமதர்மச் சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டு வருகின்றது. மரண வரி முதலிய புதுவரிகள் மூலமும், பெருந்தொழில்களைத் தேசிய மயமாக்குதல் மூலமும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஓரிரு தலைமுறைகளில் பெரிய அளவுக்குக் குறைந்துவிடும் என்று நம்பமுடியும். இவ்வாறு அரசாங்கம் தலையிடாவிட்டால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும், அதனால் கிளர்ச்சியும் புரட்சியும் தோன்றி நாடே நிலை கெட்டுவிடுமென்றும் கவிஞர் பாரதிதாசன் சமுதாயத்தை எச்சரித்துப் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் முக்கியமானதும், புரட்சிக் கனலை வெளிப்படையாகக் கக்குவதுமாகிய பாடல்,

‘ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
        உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொ டிக்குள்
ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

        ஒப்பப்ப ராகிடுவார் உணரப்பா நீ.’

என்ற ஒன்றாகும். இவ்வாறே நாட்டில் நீக்க வேண்டிய சாதி சமயப் பூசல்களையும் கண்டிக்கிறார். பெண்ணடிமை நாட்டில் நீங்க வேண்டும் என்ற உண்மையை அவர்.