பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

141


‘பெண்ணடிமை திருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை திர்ந்து வருதல் முயற்கொம்பே.’

என்று நன்கு விளக்கிக் காட்டுகின்றார். இன்னும் இவ்வாறு பல நல்ல கருத்துக்கள் அவர் பாடலில் இடம் பெற்றுள்ளன. பாரதியார் இயற்றியுள்ள ‘குயில் பாட்டு’ ‘பாஞ்சலி சபதம்’ போன்ற, சில சிறு கதைகளையும் நல்ல நீதிகளுடன் இயற்றியிருக்கிறார். அவர் தம் பாடல்களையே பார்த்துக்கொண்டிருப்போமாயின் பிற புலவர்களை விட வேண்டி வருமாதலால், இத்துடன் அவர் செய்த இலக்கியப் பணியை விட்டு மேலே செல்கிறேன்.

அடுத்து, வாழும் கவிஞர் நாமக்கல்லாரைப்பற்றிக் காணல் வேண்டும். அவர் சுதந்தரப் போராட்டக் காலத்தில் பாடிய, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடலே அவரை நாட்டாருக்கு நன்கு அறிமுகம் செய்து வைத்தது. அதற்குப் பின்னும் அவர் பல பாடல்கள் எழுதியுள்ளார். ‘அவனும் அவளும்’ என்ற அவரது காவிய நூல், தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்னலாம். அது மட்டுமன்றி, இன்னும் பல தனிப் பாடல்களும் அவர் பாடியுள்ளார். நாமக்கல்லாரும் ஓர் அரசியல் கவிஞரென்னலாம். அவர் தாம் காண விழைந்த நாட்டின் சிறப்பைப் பாட்டில் வரையறுத்துக் காட்டுகின்றார். அவர்தம் கற்பனை நாட்டில்.

‘மன்னவன் என்ற மனிதர் இல்லை—அங்கே
        மந்திரி தந்திரி யாருமில்லை
சின்னவர் என்று எவருமில்லை—பட்டம்
        தேடித் திரிந்திடும் மக்கள் இல்லை.
வேலையில் லாதவர் யாருமில்லை—முற்றும்
        வீணருக் அங்கேயோர் வேலையில்லை
கூலியில் லாதவர் யாருமில்லை—சும்மா

        கும்பிட்டுத் தின்கின்ற கூட்டமில்லை.