பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கின்றார்கள். இன்னும் பல தமிழ்ப் பேராசிரியர் தம் நல்ல இலக்கியப் பணியும், ‘கல்கி’ போன்றார் தம் நாவல் எழுதிய நல்ல பணியும் நம்மை விட்டு நீங்கா. பொதுவாகவே நாட்டில் நல்ல இலக்கிய எழுச்சி உண்டாகியுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் உயர்ந்த நடையில் தமிழ் எழுதுகிறான்; ‘கேளாறும் வேட்கும்’ வகையில் பேசுகிறான்; வண்ணக் கவிதைகள் தீட்டுகிறான். ஆடவர் மட்டுமன்றி, மகளிரும் அன்று போல இன்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பங்கு கொள்கின்றார்கள் என்னலாம்.

தமிழ் நாட்டில் மட்டுமன்றி, உலகின் பிற பாகங்களிலும் தமிழை அறிய ஆவல் பிறந்துள்ளது. வங்க நாட்டில் அன்று இவ்விழாவைத் தொடங்கி வைத்த பெரியார் திரு S. M. பானர்ஜி அவர்கள் எத்தனை ஆழமாகத் தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. உலக அரங்கில் குறளும் கம்பராமாயணமும் மொழி பெயர்ப்பு நூல்களாக அமையப் போகின்றனவே! சில தமிழ் இலக்கியங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல மொழி பெயர்க்கப்பெறல் வேண்டும். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்,’ என்ற பாரதியாரின் விழைவு நிறைவேற்றப் பெறுதல் வேண்டும்.

இயற்றமிழ்த் துறையில் மட்டுமன்றி, இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலுங்கூடத் தமிழ் இலக்கியம் பாரதியாருக்குப்பின் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்னலாம். சில ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டு இசை அரங்கு தமிழ் மொழியில் நடைபெறாததைக்கண்டு சிலர் நைந்துருகினர். இன்று அந்நிலை மாறிவிட்டது. தமிழிசைப் பாடல்கள் பல்கிப் பெருகிவிட்டன. இத்துறையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரும், செட்டி நாட்டு அர-