பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

11


கண்டுள்ளோம். தம் வாழ்வினை மட்டும் எண்ணிக் கலைக் கொலை புரியும் மாந்தர் நாட்டில் பலர். ஆனால், தம் வாழ்வையும் கலைக்காகவே தியாகம் செய்த நல்லவரும் நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர். இந்த உண்மையை அகநானூற்றுப் புலவன் ஒருவன் நன்கு எடுத்துக் காட்டுகின்றான்; அதைத் தலைவன் பண்பாட்டைப் பாடும் வகையில் சிறப்பித்துப் பேசியுள்ளான். தலைவியைக் காண வேண்டும் என்று கருதிய தலைவன், தன் மணிநெடுந்தேரேறி விரைந்து வருகின்றான். மேலும் அவன் வருவதாகக் கூறிய காலமாகிய காரும் தொடங்கிவிட்டது. குறித்த காலத்தில் திரும்பிச் செல்லாவிடின் தலைவி வருந்துவள் என்பதையும், ஆற்றி இருக்க முடியாது அலக்கண் உறுவள் என்பதையும் அவன் நன்கு அறிவான். ஆகவே, ‘காரோ வந்தது, காதலர் ஏறிய தேரோ வந்தது’ என்று தலைவி மகிழுமாறு மேகத்துடன் போட்டியிட்டுக்கொண்டு அவன் தன் தேரைச் செலுத்தச் சொன்னான் பாகனிடம். அவனும் தலைவன் உள்ளம் அறிந்து தேர்க் குதிரைகளைத் தட்டி ஓட்டினான்.

காட்டு வழியினையெல்லாம் அவன் கடக்க வேண்டும். அக்காட்டுவழி அமைதியாய் இருத்தது. தலைவன் தேரோ காடு முழுதும் கேட்கும் வகையில் பேரொலி எழுப்பி விரைந்து வந்துகொண்டேயிருந்தது. காட்டில் அவன் தேரில் கட்டிய மணிகள் தம் இன்னொலியை எழுப்பின. அவற்றின் ஒலிகேட்டு அந்தக்காட்டில் உள்ள பறவையும் விலங்கும் விலகியிருக்க வேண்டும். அவற்றுளெல்லாம் சின்னஞ்சிறு வண்டு தன் சிறகர் அடித்துப் பறந்த காட்சியே காதலன் உள்ளத்தைப் பிணித்தது. அவன் கலையுள்ளம் அச்சிறு பொருளிடத்தும் பற்றிச் சென்றது. அந்த வண்டோ, மலரில் உள்ள தேனை உண்டு கொண்டிருந்தது. தேன் இனிப்பாக இருப்பது மட்டுமன்று; அதுவே