பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கிய வளர்ச்சி[1]



 

லகம் தோன்றி எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அதன் நிலப் பரப்பில் உயிரினம் தோன்றிற்று. அவ்வுயிரினம் படிப்படியாய் வளர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வளரும் வரையில் அறிவுகளைப் பெற்று, இறுதியாக ஆறறிவுடைய மனிதனாக எத்தனையோ பலப்பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். முதன் முதல் உண்டான மனிதன் இன்றைய மனிதனுக்கு எத்தனையோ வகையில் வேறுபட்டிருந்திருப்பான். அவன் பேச அறியான். கையைக் கொண்டும், கண்ணைக் கொண்டும், ஒலி எழுப்பியும், வேறு பல வகையிலும் தன் உள்ளக் கருத்தை ஆதி மனிதன் வெளியிட்டிருப்பான். அவனுக்கு மொழி என்பது தெரியாத ஒன்று. பேசவும் எழுதவும் அறியான் அவன். இன்று எத்தனையோ விலங்குகள் வாழ்வதைப் போன்று, அன்று அந்த ஆதி மனிதன் வாழ்ந்திருப்வாழ்ந்திருப்


  1. ஆங்கிலப் பேச்சின் தமிழாக்கம்