பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பான். கன்றின் குரல் கேட்டுக் கனிந்து ஓடிவந்து நின்று பாலூட்டும் பசுவினை நாம் பார்க்கின்றோம். அதைப் போன்றே ஆதி மனிதன் தன் குரல் வழிக் கருத்தைத் தெரிவித்து மற்றவர்களோடு கலந்து உறவாடியிருப்பான். மேலும் இன்று நாம் வாழும் இக் கல்கத்தாப் போன்ற பெருநகரங்களோ சிற்றூர்களோ அக்காலத்தில் இல்லை. மனிதனும் மற்ற விலங்குகளைப் போன்று தனித்தோ சிறுசிறு கூட்டமாகவோ காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்திருப்பான். மற்றவர்களோடு அதிகமாகக் கலந்து பேச வாய்ப்பு இல்லை அவனுக்கு. எனினும், காலத்தேவனது மடியில் தவழ்ந்து வளர்ந்த மனிதன் என்றோ ஒரு நாள் பேசத் தலைப்பட்டுவிட்டான். அந்தப் பேச்சுவழியேதான் மொழி பிறந்தது.

மொழி பிறந்த அன்றே வளர்ந்து முதிர்ந்துவிடவில்லை. மொழி, பேச்சு வழக்கில் எத்தனையோ வகையான மாற்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். அது பற்றியெல்லாம் மொழி நூல் ஆராய்ச்சியாளர்கள் இன்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். நாம் அது பற்றி இப்போது கவலையுறத் தேவையில்லை. ஆயினும், அந்த மொழி உலகில் வளர்ந்து பல்வேறு வகையாகப் பலப்பல குடும்பங்களாகப் பிரிந்து இன்றைய ஆராய்ச்சி மனிதனுக்கு வேலை கொடுக்கும் வகையில் மாறுபடும் என்று அன்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

இன்று உலகில் வழங்கும் மொழிகள் பலவாயினும், மொழி நூல் ஆய்வாளர் அவற்றை ஒரு சில குடும்பங்களுக்குள் அடக்கிவிடுவர். அவற்றுள் ஒன்றே திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் அன்னை போன்றவளே தமிழ்த்தாய். தமிழைத் தாய் என்கின்றேன், அவள் வழியே தமிழ் நாடும் தமிழ் மக்களும் வாழ்கின்ற