பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

25


to discover which of the great moulds of Poetry corresponds most closely with the nature of thought' (P. 60) என்று கூறுகின்றார்.

பிறிதோரிடத்தில் 'Poetry, like Politics, is an outward mode of expressing the acting principles of social life.' (P. 60) என்கின்றார். இலக்கியத்தில் நயமும் வளமும் கலந்திருக்க வேண்டும் என்ற உண்மையை அவர் உவமை வாயிலாக விளக்குவது சாலச்சிறந்ததாகும். இதோ அவர் வாக்கு:

'As just as in human beings it is the complete union of soul and body which constitutes the harmonious life of each person, so in poetry the Beauty and Propriety of the imaginative form will proceed from the organic unity of the imaginative conception.' இவ்வாறு அவர் இலக்கியமாகிய செய்யுள் பற்றிப் பல எழுதிக்கொண்டே செல்கின்றார். உதாரணத்துக்காக நான் இங்கு ஒருவரை மட்டும் எடுத்தாண்டேன். இவரைப் போன்ற பல மேலை நாட்டு அறிஞர்கள் இலக்கியக் கலையினை ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். நான் எடுத்துக் கொண்ட பொருளுக்குப் புறம்பே செல்லாத வகையில் இந்த அளவோடு இலக்கியம் என்பது என்ன என்று ஆய்வதை நிறுத்திக்கொண்டு, மேலே தமிழ் இலக்கியம் வளர்ந்த வரலாற்றைக் காண முற்படுகிறேன்.

இன்று தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் பழையது. அதன் பெயரே அதன் பழமையைக் காட்டும். அதற்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அது முழுதும் கிடைக்கப் பெறாமையின்; கிடைத்தவற்றுள் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம் என்பது