பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் சேர்த்து இணைக்காப்பியம் (Twin epics) என்பர். என்றாலும், இரண்டினுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள. ஒரே காலத்தில் சற்று முன்பின்னக இந்த இரண்டு இலக்கியங்களும் தோன்றின போதிலும், இவற்றின் அமைப்பிலேயே ஒரு வேறுபாடு காண்கின்றோம். பொருள் அமைப்பிலும்,பொருளை விளக்கும் வகையிலுங்கூட வேறுபாடுகள் உள. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் அது வரையில் இல்லாத ஒரு சமய வேறுபாட்டை மணி மேகலை உண்டாகிவிட்டது என்னலாம். சங்க இலக்கி யங்களோ, அற நூல்களோ, சிலப்பதிகாரமோ ஒரே சம யத்துக்கு உரிய இலக்கியம் என்று சொல்ல முடியாது. சங்க காலத்தில் நாட்டில் பல சமயங்கள் இருந்தன. சிறப் பாகச் சைவமும் வைணவமும் ஓங்கி நின்றன. என்ருலும், ஒரு பாட்டிலாவது சமய ஏற்றத் தாழ்வையோ, வேறுவகை வேறுபாடுகளையோ அவை குறிக்கவில்லை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் சமணர் என்பர். அவர் அண்ணன் செங்குட்டுவன் சைவன். அவர் தம் காப்பியத் தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய எல்லாச் சமயங்களின் உண்மையையும் இடங்கருதிக் குறிக்கின்ரு ராயினும், ஒன்றை ஒன்று தாழ்த்தி மேலோங்க வேண்டும் என்ற நினைப்பின் வழி அவர் சொல்லவில்லை என்பதைப் பயில்வார் நன்கு அறிவர். திருமாலைப்பற்றி இடைப்பெண் கள் பாடுவதாக அவர் குறிக்கும் பாடலை யாராய்ந்தால் அவரை வைணவராகவே நினைக்கத் தோன்றும். அதைப் போன்றே முருகனைப்பற்றிப் பாடுவதும். இளங்கோவடிகள், கவுந்தி அடிகள் வாயிலாகத் தம் சமண சமய உண்மையைக் கூறுகின்றர். ஆனால்,ஒன்றிலும் பிற சமயத்தைப்பற்றிய நிந்தனை இல்லை, சங்ககாலப் புலவர்களோ எனின், அவருள் ஒருவரும் சமயம்பற்றிப் பேசியதுகூட இல்லை. அத்தகைய நாட்டிலே ஏறக்குறைய அதே நூற்ருண்டிலேயே சமயம்பற்றிப் பேசியதோடு, தன் சமயந்தான் உயர்ந்ததென்றும் மற்றவை தாழ்ந்தன வென்றும் கூறும் அளவுக்கு மணிமேகலை சென்றுவிட்டது.