பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி 37 அந்நூல் பெளத்த சமய நூல். பெளத்த நெறி இன்று நம் உரிமை அரசாங்கத்தாரால் நன்கு போற்றப்படுகிறது. புத்தர் பிறந்த 2500ஆம் ஆண்டு விழாவை அண்மையில் நாடெங்கும் விடுமுறையுடன் கொண்டாடினோம்.புத்தர் தம் புனிதத் தன்மையைப் போற்றும் அதே வேளையில் அவர் அறம் கூறும் முதல் தமிழ் நூல் நாட்டில் சமயவேறு பாட்டை உண்டாக்கிற்று என்பதை அறியத் தமிழர் உள்ளம் வருந்தாதிருக்கமுடியாது. இந்த ஒரு குறையைத் தவிர இந்த இலக்கியமும் தமிழ் மரபில் சிறந்த ஒன்றாகவே வைத்துப் போற்றப்படுகிறது என்பது உண்மை. தமிழ் நாட்டில் சமயம்பற்றியே கவலை இல்லாத காலம் போக, சமய வேறுபாடும் சமயவெறியும் நாட்டில் குடியேற ஆரம்பித்தன. சாதி யென்பதறியாத நாட்டிலே எத்தனையோ வகையான சாதிகளும் தோன்றலாயின. அதற்கேற்ற வகையில் தமிழ் நாட்டின் இலக்கிய வாழ்வும் மாறத் தொடங்கிவிட்டது. சங்க காலத்துச் சமயங்களுள் தலை சிறத்தன சைவமும் வைணமும் எனக் கண்டோம். பிறகு பெளத்தமும் அதை அடுத்துச் சமணமும் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. பெளத்த ஆதிக்க காலம் தமிழ் நாட்டின் வரலாற்றில் இருட்டடைப்புக் காலமாய் இருந்தமையின், அக்கால இலக்கியங்கள் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டு வரலாற்றில் சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றண்டிற்குப் பின்பும் ஏழாம் நூற்ருண்டுக்கு முன்பும் சுமார் நான்கு நூற்றண்டுகள் ஒளியிழந்த காலமாகக் கருதப்படுகின்றன. அக்காலத்தைத்தான் களப்பிரர் ஆட்சிக்காலம் என்பார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தமிழ் நாட்டு வேந்தர்தம் ஆட்சி அக்காலத்தில் இல்லை என்பது தெளிவு, இருந்தால், வரலாற்றில் இருட்டிப்பு நேர்ந்திராது. அத்துடன் இலக்கியம் பற்றிய குறிப்பு ஒன்றுமே அக்காலத்தில் இல்லை. அந்த இடைக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எவை என்பதும்