பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கங்கைக் கரையில் காவிரித் தமிழ் திட்டமாகச் சொல்லமுடியாது. வேற்று வேந்தர் ஆட்சி யில் முதன் முதல் தமிழ் நாடு சிக்குண்ட அக்காலத்தில் இலக்கிய வளர்ச்சியும் தடையுற்றதோடு, வேறு வகையில் நாடே திரும்ப ஆரம்பித்தது எனலாம். இரண்டாம் நூற்றண்டில் காணும் சங்க இலக்கியம் போன்றவற்றிற்கும் ஏழாம் நூற்றண்டில் காணும் தேவாரம் போன்ற இலக்கியத்திற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. அத்துணை வேறுபாடுகளுக்குக் காரணமான வரலாற்றை அறியத்தான் வழி இல்லை.ஏதோ விளக்கமும் இரண்டொரு நூல்களின் பெயர்களை அக்காலத்துக்கு உரிமையாகக் கொள்ளினும், அவைபற்றியும் திட்டமாக எந்த முடிவும் செய்ய வழி இல்லை. எனவே தமிழ் இலக்கிய வரலாறு அடுத்து ஏழாம் நூற்றாண்டில் வேறு வகையில் தோன்றி வளர்ச்சியுற்றது எனலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் சமணம் தழைத்தோங்கியிருந்தது. ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தழைத்திருந்த பெளத்தத்தைக் கொன்று, சமணம் ஓங்கியிருக்கவேண்டும். அவ்வாறு ஓங்கிய சமணம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தமிழ்நாட்டில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது எனலாம். அக்காலத்தில் தோன்றிய சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் அச்சமயத்தைக் கெடுத்துத் தம் சமயத்தை ஓங்கச் செய்தனர். எனினும், பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் அடியோடு அழிந்துவிடாது, சிற்சில இடங்களில் வாழ்ந்து வந்தன என்பது கண்கூடு. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சமணர்களுக்குச் சிறந்த பங்கு உண்டு. சங்க கால இறுதி நாள் தொடங்கி ஏறக் குறைய ஒன்பதாம் நூற்றண்டு வரையில் அவர்கள் எழுதிய இலக்கியங்கள் பல; இலக்கணங்களும் சில. அக்காலத்துக்குப் பின்னும் அவர்கள் எழுதிய சில நூல் களும் உள. நன்னூல் போன்ற நல்ல இலக்கண நூல்