பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


எண்ணிக்கை மிக அதிகமாய் வளர்ந்துவிட்டது. தனிப்பட்ட கடவுட்பற்றாலும், ஊர்ப்பற்றாலும் அரசர் மேலுள்ள பற்றாலும் இடைக்காலப் புலவர்கள் இத்தகைய பல்வேறான தொண்ணூற்றாறு வகை பிரபந்தங்களை எழுதத் தொடங்கிவிட்டார்கள். அவற்றையெல்லாம் விளக்கிக் காட்டும் பாட்டியல் என்ற இலக்கண நூலும் பின்னர் ஏற்பட்டுவிட்டது. எனவே, இடைக்காலப் பிற்பகுதியில் பெரும்பாலாரான புலவர் இவ்வாறு சிறு பிரபந்தங்கள் பாடித் தமிழ் இலக்தியத்தை வளம்பெறச் செய்ய நினைத்தார்கள். எனினும், மிகச் சிறந்த புலவர்களாகிய ஒரு சிலர் பாடியவை மட்டுந்தான் இன்றளவும் வாழ்கின்றன. ஒரு சில பெயரளவில் வாழ்கின்றன. பல மறைந்துவிட்டன. அதற்குக் காரணம் அவற்றுள் பெரும்பாலானவை ஒன்றை ஒன்று தழுவியது போன்றும் ஒரே பொருளை விளக்குவன போன்றும் இருந்தமையும் பொருள் ஆழமும் அமைவும் கொள்ளாமையுமேயாகும். போனது போக, எஞ்சி இன்றளவும் வாழ்கின்ற சிறு பிரபந்தங்கள் உண்மையில் தமிழ் இலக்கிய உலகில் இடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய சிறு பிரபந்த இலக்கியங்கள் சில தமிழில் உயர்ந்த பொருள்களையும் நயங்களையும் கொண்டுள்ளன.

இனி, கடைசியாகச் சென்ற இரண்டொரு நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி அடைந்ததைக் கண்டு இன்றைய இலக்கியத்தைக் காண முயல்வோம். இந்திய நாட்டு வரலாறு மாற மாற, அதை ஒட்டித் தமிழ் நாட்டின் வரலாறும் மாற்றம் அடைந்தே வந்தது. தமிழ் நாட்டில் நெடுங்காலத்துக்கு முன்னரே ஆரியர் குடியேறித் தம் பண்பாட்டையும் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் தமிழருக்கு வழங்கித் தமிழரோடு கலந்து வாழ்ந்த காரணத்தால் இராமாயணம், பாரதம் போன்ற பேரிலக்கியங்களும், பல சிறு பிரபந்தங்களும், பிற மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழ் இலக்கியத்தின் வரிசையில் இடம் பெறலாயின. காலவேகத்தில் அவை தமிழ் இலக்கியங்களோடு ஒன்றிக்-