பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

51


கலாம். பிறரைப் புறங்கூறாத தமிழன் என்ற அடிப்படையில் அவர்கள் முன் இல்லாத இக்காலத்தில் அவற்றை யெல்லாம் நான் இங்குக் கூறத் தேவையில்லை.

இனியும் தமிழ் இலக்கியம் வளர்ந்துகொண்டேதான் போகும். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்', என்ற பாரதியாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம். எங்கிருக்கும் தமிழர்களும் ஒன்று கூடி இந்த ஆக்கவேலைக்கு வழிகோலவேண்டும். வங்க நாட்டில் வாழும் நீங்கள் அத்துறையில் ஆவன செய்து வருவதைக் கண்டு மகிழ்கின்றேன்! உங்கள் பணி சிறப்பதாக!