பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்



 

னிதன் பிறந்து நெடுங்காலத்துக்குப் பிறகுதான் மொழியும் அதன் வழிக் காப்பியங்களும் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் பிறந்த போதே அறிவுடன் கூடிய மேதையாய் இருக்கவில்லை என்பது உண்மை. உலக வாழ்வில் அவன் வாழ்நாள் மிகக்குறைந்த ஒன்றேயாயினும், அந்தக்குறைந்த வாழ்நாளில் அவன் இன்றைய நிலையை அடைய எத்தனையோ நாட்கள் கழிந்திருக்க வேண்டும். அந்த நாட்களிளெல்லாம் அவன் இன்றைய நாகரிகத்தில் வாழ்ந்தான் என்று சொல்ல முடியாது.

மனித வாழ்வை உலகில் வாழ வைப்பன ஒரு சில. அவனுடைய கலையும், பண்பாடும், நாகரிகச் சின்னங்களும்-ஏன்?- இலக்கியங்களும் அவன் வாழ்வை உலகுக்குக் காட்டிக்கொண்டே யிருப்பனவாகும். அவை பேசாத பெருநிலையில் வாழ்கின்றன. இன்று புதைபொருளாராய்ச்சியாளர்கள் நிலத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களைக் கொண்டு, மனிதன் வாழ்நாளில் சாதித்தவற்றையும், அவனது வாழ்க்கைமுறை பற்றியும், பலப்பல செய்திகளைப் புதிது புதிதாகக் கண்டு வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். சென்ற ஆண்டில் இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்