பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


போக்கில் வாழ்வொடு ஒட்டிய பல நல்ல கருத்துக்களை எடுத்தாண்டிருக்கின்றார். எனவே, அதுவும் ஒரு சிறந்த இலக்கியமாய் வாழ்கின்றது என்னலாம்.

சங்க கால இலக்கியங்களுக்கு அடுத்து இக்காப்பியங்களையே வரிசைப்படுத்துவர் ஆய்வாளர். இவை ஐம்பெருங் காப்பியம் என்றும், ஐஞ்சிறு காப்பியம் என்றும் பிரிக்கப்பெற்று, அவற்றுள் அடக்கப்பெறும். இந்தப் பத்துள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற மூன்றைத் தவிர, மற்றைய இரண்டு பெருங்காப்பியங்களைப் பெயரளவிலேதான் காண்கின்றோம். ஐஞ்சிறு காப்பியங்களில் சில வாழ்கின்றனவேனும், அவை வாழும் மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டித் தாம் அமையாது விலகி நின்றமையின், பெரும்பாலும் தம் வாழ்வும் வழக்கும் இழந்து மங்கிவிட்டன என்னலாம்.

பிற்காலத்தில் சிந்தாமணியை ஒட்டி எழுந்த காப்பியங்கள் சில. இராமாயணம் பாட வந்த கம்பர், பலப்பல கருத்துக்களையும் அடிகளையும் அப்படி அப்படியே சிந்தாமணியிலிருந்து எடுத்தாண்டுள்ளார். இரண்டையும் ஒத்து நோக்குவார்க்கு இவ்வுண்மை விளங்காமற் போகாது. இயற்கை நலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் விளக்கிப் பேசுவதில் சிந்தாமணியின் ஆசிரியர் சிறந்தவராவார். வாழ்வும் தாழ்வும் இயல்பு என்பதை, நன்கு வாழ்ந்து விழ நிற்கின்ற சச்சந்தன் வாக்கில்,

‘சாதலும் பிறத்தல் தானும் தன்வினைப் பயத்த வாகும்;
ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் தணிதல் தானும் நுண்ணுர்வு இன்மை யன்றே?
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி’

என்று காட்டுகின்றார். இயற்கை நலத்தை,