பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


இவரால் பாராட்டப்பெறும் பலருடைய பாடல்களின் தொகுப்பாகிய அத்திருமுறையில் இதுவும் இடம்பெறுமாயின், இதைச் செல்வமென்று சொல்லாது வேறு என் சொல்வது? சமயத்துறை நீங்கி, பிற வகையில் இது தமிழ் இலக்கியமாய் அமைந்து தமிழ் இலக்கியச் செல்வத்தை மேலும் எவ்வாறு சிறப்படையச் செய்கிறது என்பதைக் காணல் வேண்டும்.

ஒருசிலர் சேக்கிழார் பெரிய புராணத்தில் குறைகள் இருக்கின்றன என்பர். குறைவு ஒன்றும் இல்லாத இலக்கியம் எதுவுமே உலகில் இருக்க வழியில்லை. ஆனால், குறையின் அளவைக் கண்டு குணத்தின் அளவு நோக்கி நல்ல குறையற்ற பண்பு அதிகமாயின், அந்த இலக்கியத்தைக் கொள்ள வேண்டுவதுதான் அறிஞர் செயல். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்,’ என்று வள்ளுவர் இதைத்தானே வற்புறுத்துகின்றார்? சேக்கிழார் இலக்கியத்தில் அவர்கள் காணும் குற்றங்கள் சில. ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்வது எனது இன்றைய பேச்சின் நோக்கமன்று. எனினும் அவர்கள் அதிகமாகக் குறையெனப் பேசும் ஒன்றை எடுத்துக்காட்டுக்கு விளக்கி, அதைச் சேக்கிழாரே எப்படிக் குற்றமற்ற தன்மையில் விவரிக்கின்றார் என்பதையும் பார்ப்போம்.

இயற்பகை நாயனாரைப் பற்றித்தான் சிலர் மிக அதிகமாகக் குறைபட்டுக்கொள்வார்கள். ‘இப்படி ஒருவன் தன் மனைவியை வந்த எவனுக்கோ கொடுத்து விடுவதா கடவுள் பக்தி?’ என்றும், ‘இத்தகைய ஆபாசக் கதையையா படிக்க வேண்டும்?’ என்றும் பலவாறு கேட்பார்கள். ஆனால், அந்தத் தலைவர்களே தங்கள் தொண்டர்கள் தங்களுக்காக எதையும் தியாகம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள்தாம். அண்ணல் காந்தி அடிகளார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்தபோது, அவரிடம் அளவு மீறிப் பத்தி கொண்ட