பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

91


இவ்வாறுதான் இருப்பார்கள் என இலக்கணம் வகுக்கின்றார்.

‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.’
(திருக்கூட். 8)

என்று அடியவரைப் பொதுவாகக் குறித்தார்; பின்பு நாவரசர்மேல் வைத்து,


‘மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்த மிழின் மாலைகளும் செமபொற் றாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந் தேத்திப் பரவிச் செல்வார்’
(திருநா. 225)

என்று அன்பால் கட்டுண்ட அடியவர் நிலையை விளக்குகிறார். மேலும், புறக்கோயிலில் இறைவனைக் காணும் சிறப்பினும் அகக்கோயிலில் ஆண்டவனைக் காண்பதே மேல் என்பதைப் பூசலார் நாயனார் புராணத்தில் நன்கு விளக்கிக் காட்டுகின்றார். அந்த அகக் கோயிலைச் சேக்கிழார்,

‘சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆல யம்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால் அடிநிலை பாரித்து அன்பால்

காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்க லுற்றார்.’

(பூச. 6)

என்று பாராட்டுகின்றார். மேலும், இறைவனைக் கண்டு போற்றுங்கால், அடியவர் அனைத்தையும் மறக்க வேண்டும் என்னும் உண்மையை சுந்தரர்மேல் வைத்து,