பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்


‘அம்புய மலராள் மார்பன் அனபாயன்’ என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்த
                                                                   தன்றே’

(ஞான. 847)


‘அந்நகரில் பாரளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும்
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழிமுதலோர்

பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழர்

                                                       எனப்பொலிவார்.’

(புகழ். 8)


‘மந்திரிகள் தமைஏவி வள்ளல் கொடை அனபாயன்

முந்தைவரும் குலமுதலோர் ஆயமுதல் செங்கணார்,’

(செங்கட். 14)

என்றெல்லாம் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தந்த செல்வமாகிய பெரிய புராணத்து எத்தனையோ அரிய பல நல்ல கருத்துக்களை ஆராயலாம். அறிஞர்கள் வாய்ப்புள்ள வழி நூலில் நுழைந்து நலம் கண்டு, மற்றவருக்கும் அவ்வின்பத்தை வழங்குவார் களாக! சேக்கிழாரின் செம்மை நெறி சிறப்பதாக!