பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s - - - கஞ்சியிலும் இன்பம்

தமிழ் நாட்டில் பழங்காலத்தில் கல்யாணத்தில் மனப் பெண்ணுக்குப் பரிசம் வைத்து மணப்பது எல்லாச் சாதியா ரிடத்தும் வழக்கமாக இருந்தது. பிற்காலத்தில் சில வகுப் பினரிடம் இது மாறி வரதகதின வாங்கும் வழக்கம் ஏற் பட்டது. மாமன் மகனே மணப்பது உரிமையாகப் பல சாதியினர் வைத்திருந்தார்கள். சில சாதியினர் அப்படிச் செய்வதில்லை. மாமனே மணக்கும் வழக்கம் சிலருக்கு விலக்கு ; சிலருக்கு உடன்பாடு, - :

இப்படியாக வந்த வழக்கங்கள் சிலவற்றை நாடோடிப் பாடல்களால் உணரலாம். ஏழை மக்களின் பெண்கள் கல்யாண விளேய்ாட்டு விளையாடுவார்கள். இடையிடையே பாடல்கள் வரும் அவற்ருல் பல செய்திகள் தெரியவரு கின்றன. . . . -

பெண் வீட்டார் என்றும் பிள்ளை விட்டார் என்றும் இரண்டு கட்சிகள் வகுத்துக்கொண்டு இந்த விளையாட்டு ஆடுவார்கள். - -

பெண்ணுக்குத் தாய் பிள்ளே விட்டாரை அணுகி அவர்களோடு பேச்சுக் கொடுத்துப் பழக்கம் செய்துகொள் கிருள். அதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டுமே "நான் ஒரு மாயக் குறவனுக்கு மனேவியாகப் புகுந்தேன்: வாயில்லாப் பூச்சியாகிய பெண்ணப் பெற்றேன் ; குடும் பீத்தைக் காப்பாற்றும் பொறுப்பு என் தலைமேல் விழுந் தது; வெயிலில் அலேந்து திரிந்து கூலிவேலை செய்தேன். தலை காய்ந்துபோயிற்று. கொஞ்சம் எண்ணெய் வாருங் கள்” என்று கேட்பாள். இதிலிருந்து கல்யாண் விளை யாட்டு ஒரு நாடகம்போலத் தொடர்ந்து நடைபெறும்.