பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கஞ்சியிலும் இன்பம் - - 29.

உழைப்பின் சிரமம் தோன்ரும்ல் செய்யும் மருந்து, புன் னகையுடன் வரும் அவள் பேச்சு 1 . .

கஞ்சி குடிக்கும் நேரமாயிற்று. அவள் வருவா ளென்று பார்க்கிருன் பரந்த திசைகளிலெல்லாம் அவன் கண்கள் நாடுகின்றன. அவனது வயிற்றுப் பசிக்கு மேலே இருக்கிறது கண்ணின் பசி, அசைந்து ஒசிந்து வரும் வேலாயி அவன் கண்ணில் படுகிருள். உள்ளம் உணர்ச்சி வசமர்கிறது. மகிழ்ச்சி பாட்டாகிறது. -

வேலி ஒரம் வார புள்ளே-தம்ம

வேலாயிக் குட்டிதாண்டா ! காலேக் கஞ்சி யோடே வந்தால்-நம்ம

காதடைப்புத் திருமடா ! காலேக் கஞ்சியோடு அவள் வருகிரு ளென்ருலே காது அடைப்புத் தீர்த்துவிடுமாம்! கஞ்சி வந்து குடிக்க வேண்டுமென்பதுகூட இல்லே. கண்ணின் பசி முதலில் தீர்ந்துவிடுகிற தல்லவா? -

★ - வாழ்க்கையில் சிறிது தூரம் பிரயாணம் செய்த தம்பதிகள் அவர்கள். ஒருவருக்கொருவர் எதிரே பேசிப் பேச்சை வளர்ப்பதிலே தனி இன்பம் கண்டவர்கள். மூன் ருவது மனிதருக்கு, "என்ன, இவர்கள் ஏட்டிக்குப் போட்டி பேசிச் சச்சரவிடுகிருர்கள்? அவன் சொல்வதை இவள் உடனே கேட்டு நடப்பதில்லை; பதில் பேசு கிருளே " என்று தான் தோன்றும் ஆல்ை சூகமம் வேறு. பேச்சை வளர்ப்பதில் இருவருக்கும் ஆனந்தம். அவன் கேட்டது. இவள் பேசாமடங்தை போலக் கொண்டு போய்க் கொடுப்பது என்று இருந்துவிட்டால் அது வெறும் யந்திர வாழ்க்கையாக அல்லவா போய்விடும் 2. எஜமானனுக்கு வேலைக்காரி பணிந்து ஒழுகும் முறை அல்லவா அது? இங்கே யார் எஜமானன்? யார் வேலை