பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அத்தான் விஜயம்

அத்தை மகனே அத்தான் என்று வழங்குவது தமிழ் காட்டு வழக்கு. அத்தை மகனே மணம் செய்துகொள் வதைச் சில சாதியார் உரிமையாகக் கொண்டாடுவர். பெரும்பாலும் அத்தைமகனக் கணவகைப் பெறும் வழக் கத்திலே ஊறிய சமுதாயத்தில் கணவனே அத்தான் என்று அழைக்கும் மரபு உண்டாயிற்று. அவன் அத்தை மகனுக் இல்லாவிட்டாலும் அத்தான் என்று வழங்கும் சம்பிரதா யம் மாறவில்லை.

தமக்கைக்கு அத்தான் முறையானுல் தங்கைக்கும் அத்தான் முறைதானே? ஆதலால் அக்காள் புருஷன அத்தான் என்று வழங்கும் முறையும் தொடர்ந்து வந்தது. பிராமணர்கள் அக்காள் புருஷனே அத்திம்பேர் என்று வழங்குகிருர்கள் மற்றச் சாதியினர். அத்தானென்று

அழைப்பதே பெரும்பான்மையான வழக்கம்.

தமக்கை புருஷனைக் கண்டால் தங்கைமார்களுக்கு அளவில்லாத ஆனந்தம். அவனுக்கும் அவர்களைப்பொம்மை களாக கினைத்து விளையாடுவது இன்பத்தை அளிக்கும். அத்தானைப் பரிகாசம் செய்து கிண்டல் பண்ணுவது, தமிழ் நாட்டுக் குடும்பங்களில் ஹாஸ்ய உணர்ச்சி யிருப்பதற்கு அடையாளமாக நிலவுகிறது. - . . . ... . . . . .

அத்தான் இன்னும் குடித்தனம் வைக்கவில்லை. அக் காள் பிறந்தகத்திலேதான் இருக்கிருள். அடிக்கடி மாம

ஞர் வீட்டுக்கு அவன் விஜயம் செய்கிருன் ஹாஸ்ய சம்பா