பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகையும் மலரும்

உலகம் முழுவதுமே பெண்களே அழகுப் பொருளாக வைத்துப் பாராட்டுகிறது. " மலரினில் நீல வானில் மாத ரார் முகத்தில் எல்லாம், இலகிய அழகை ஈசன் இயற்றி ன்ை” என்று பாரதியார் சொல்லுகிருர், இயற்கையி லேயே அழகுக்கு இருப்பிடமாக இருக்கும் மகளிரை ஆடையாலும் அணியாலும் பின்னும் அலங்களித்து அழகு பார்க்கிறது உலகம். இன்று புதிய புதிய நாகரிக மோஸ் தர் உலகத்தில் எழும்புகின்றதென்று சொல்வது பெரும் பாலும் பெண்ணுலகத்தின் அலங்கார முன்னேற்றத்தைக் கண்டுதான்.

ஆடவர்களும் ஆடையும் அணியும் புனேந்து கொண் டாலும் மகளிருக்கே அவை உரிய பொருள்களைப்போல விளங்குகின்றன. தமிழ் காட்டில் ஆபரணம் பூணுவது பெண்களுக்கு உடன்பிறந்த உரிமை, மலர் குடுவது அவர் கள் உல்லாசத்தை மிகுதிப்படுத்தும் காரியம். பெண் களேத் தமிழ்க் கவிகள் பலபல விதமாக அழகிய வருண னேப் பெயர்களே இட்டு வழங்குவார்கள். சிறிய இடையை உடையவள், கரிய கூந்தல உடையவள் என்பனபோல வருணிப்பார்கள். நல்ல நகைகளைப் பொறுக்கி அணிந்து கொள்பவள் என்று பெண்களேக் கூறுவது உண்டு.

தெரியிழை, ஆயிழை என்ற தொடர்கள் பெண் களைக் குறிப்பன. ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணி பவள் என்பது அந்தத் தொடர்களின் பொருள். இக் காலத்திலும் மாதர்கள் புடைவைக் கடைக்கோ கைக்