பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடும்ப விரிவு

குடும்பத்தை விட்டு விட்டு விரக்தியோடு வெளிப் பட்ட ஒரு சக்கியாசி ஆடைகூட இல்லாமல் வெறும் கோவணுண்டியாகத் திரிந்துகொண்டிருந்தார். ஒற்றைக் கோவணங்தான் அவர் சொத்து அவருக்குக் கைகளே பிச்சைப் பாத்திரம்; வானமே கூரை. இந்த உலகம் முழு வதும் அவருக்குச் சொந்தம்.

இவ்வாறு வாழ்க்கை கடத்திய அவருக்குப் போதாத, காலம் வந்தது. யாரை விட்டது. சனியன்? யாரோ ஒரு பக்தர் அந்தச் சாமியார் ஒற்றைக் கோவணத்தோடு திரி வதைக் கண்டு மனம் உருகி, "உலகம் எல்லாம் பட்டும் துகிலும் உடுத்துப் பகட்டும்போது இந்த மகானுக்கு இரண்டாங் கோவணங்கூட இல்லையே! என்று அங்க லாய்த்தார். பிறகு சுத்தமான கோவணம் இரண்டைத் தனியே கெய்யச் செய்து சங்கியாசியைப் பணிந்து கெஞ்சி அவரிடம் சமர்ப்பித்தார். அன்புடையவர்களது . உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தால் அந்தப் பரதேசி இரண்டையும் ஏற்றுக்கொண்டார்.

ஒரு நாள் ஒரு கோவணத்தைக் கட்டிக்கொள்வது, மற்ருென்றைக் கசக்கிக் காயப் போடுவது, அடுத்த நாள் அதைக் கட்டிக்கொள்வது - என்று இப்படியாக அக்த இரண்டு கோவணங்கள்ேயும் சங்கியாசி உபயோகப்படுத்திக் கொண்டார். காளாக ஆக, கோவணத்தைச் சுத்தமாகக் கசக்கிக் காயப் போட்டுப் பத்திரமாக எடுத்துவைத்து