தடும்ப விரிவு A.”
உபயோகிப்பதில் அவர் கவனம் செல்லத் தொடங்கியது. அவருக்கு வேறு ஒரு சொத்தும் இல்லாவிட்டாலும், பணக் காரன் தன் செல்வத்தை எப்படி மிகவும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவானே, அப்படி அந்தக் கோவணங்களைப் பாதுகாத்து வந்தார்.
ஒரு நாள் உலர்த்தி யிருந்த கோவணத்தை எலி கடித்துவிட்டது. அதைப் பார்த்தபோது சங்கியாசி வருத்த மடைந்தார். இவ்வளவு ஜாக்கிரதையாகக் காப்பாற்றினதை எலி கடித்து காசமாக்கி விட்டதே ' என்ன செய்வது ! என்ற துக்கம் அவர் உள்ளத்திலே குமுறியது. அதோடு, மாற்றி மாற்றி உலர்ந்த கோவணத்தைக் கட்டிக்கொண்டு பழக்கமாகி விட்டபடியால், இப்போது இரண்டாவது கோவணம் இல்லாமல் வாழ்வதே முடியாது என்று தோன் றிற்று. இதைப் போய் தாம் ஒருவரைக் கேட்பதா? என்ற எண்ணம் முதலில் தோன்றிலுைம், சங்கியாசிக்குக் கெளரவம் என்ன வேண்டியிருக்கிறது? தினந்தோறும் உணவைக் கேட்டுப் பிகை எடுத்துத்தானே பெறுகிருேம்? இப்போது கோவணம் கேட்பதல்ை நாம் ஒன்றும் புதிய காரியம் செய்யப் போகிறதில்லையே! என்ற சமாதானம் பிறகு தோன்றித் தைரியத்தை உண்டாக்கியது. பழைய அன்பரைக் கேட்டார். அவர் ஒன்றுக்கு இரண்டாகத் தந்தார். . -
அந்த இரண்டையும் மிக்க சந்தோஷத்தோடு பெற் - றுக்கொண்ட சாமியார், "இனிமேல் இந்த இரண்டும் கெட்டுப்போக விடக்கூடாது" என்று நினைத்தார். எலி கடித்துவிட்டால் என்ன செய்வது? கோவணங்களைப் பெற்றதைக் காட்டிலும் அவற்றைக் காப்பாற்றுவது பெரிய காரியம் ஆகிவிட்டது. எலியின் உபத்திரவத்தைப் போக்க என்ன பரிகாரம் உண்டு என்ற ஆராய்ச்சியிலே புகுந்தார். பூனே ஒன்றை வளர்த்தால் எலி வராது என்ற