பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 கஞ்சியிலும் இன்பம்

இருந்தால்தான் புதுப்பானைச் சோற்றைச் சந்தோஷமாகச் சாப்பிடலாம். புதுப்பானேச் சோற்றுக்கு அரிசி வேண்டும்; அதற்கு உரலும் பொன்னுலக்கையும் வேண்டும். ஒன் றுக்கு ஒன்று இன்றியமையாத பொருளாகி உரல் முதல், கொட்டாப்புளி வரையில் பல பொருள்கள் ஒவ்வொன்ருக வந்தன. எல்லாம் அந்தப் பெண்ணின் ஆட்சிக்குள் இருந்தன. இன்னும் என்ன என்ன பொருள்கள் வந்து சேருமோ, யார் கண்டார்கள்?

இந்தக் குடும்ப விரிவைப் பின் வரும் நாடோடிப் பாடல் சொல்கிறது: -

உரல் நெல்லுக் குத்தி எடுக்கப்

பொன்னுலக்கை வேணுமா! பொன்னுலக்கைச் சோருக்கப் புதுப்பான வேணுமா ! புதுப்பாணச் சோறு தின்னக்,

கணக்குப்பிள்ளை வேனுமா ! கணக்குப் பிள்ளை சாவுக்குக்

கைப்பிள்கின வேணுமா ! கைப் பிள்ளே பால்கறக்க

ரெட்டை எருமை வேனுமா ! ரெட்டை எருமை மேய்க்க ஒரு - ஒட்டப்பையன் வேணுமா 1 ஒட்டப் பயலுக்குச் சோருக்கக்

குப்பாயி வேனுமா குப்பாயிக்குப் பேன்பார்க்கக்

குரங்குக் குட்டி வேனுமா! குங்குக் குட்டிக்கு மணிஅடிக்கக் கொட்டாப்புளி வேணுமா ! ஆம், எல்லாம் வேணும்; இப்படியே போய்க் கொண் டிருந்தர்ல் பிரபஞ்சம் முழுவதும் வேண்டியதுதான்