பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


iv
    உண்மையான நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதே என் நோக்கம். பாடல்களை விளக்கிக் காட்டும்போதுதான் இக்காலத்து ரசிகர்கள் அவற்றின் சிறப்பை உணர்கிறார்கள். ஆகையால், முன்பு 'சுதேச மித்திரன்' வாரப் பதிப்பிலும், வேறு சில பத்திரிகைகளிலும் நாடோடிப் பாடல் விளக்கங்களை எழுதினேன். அவற்றில் ஒரு பகுதியே இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். இனியும் தொடர்த்து சில புத்தகங்கள் வெளியாகும்.
சென்னை

25–4–49

கி. வா. ஜகந்நாதன்
குறிப்பு


    ப்போது இதன் இரண்டாம் பதிப்பு வெளியாகிறது. இதில் நான் யாதொரு மாற்றமும் செய்யவில்லே. இதன் பின்,"குழந்தை உலகம்", "மச்சு விடு” என்ற பெயருடன் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். அவற்றிலும் பல நாடோடிப் பாடல்களின் விளக்கத்தைக் காணலாம். 


மயிலாப்பூர்

30-7-53

கி. வா. ஜகந்நாதன்