பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கஞ்சியிலும் இன்பம்

மரத்தை, மனிதர் வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின்பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை, "வேலிக்குப் படல் கட்டுகிறவனே" என்று குறிப்பித்தான். தன் மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும் வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை, "மூவர் இரு காலால் கடக்கக் கண்டாயோ?" என்பதனால் தெரிவித்தான்.

அவள் இடையில் ஓரிடத்தில் தண்ணீர் குடித்த போது அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் அவள் இறந்தாள் ஊரார் ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு தர்மத்துக்கு எரித்து விட்டார்கள். இதையே அந்த நெசவுகாரன், " அவள் செத்து மூன்று நாள் ஆச்சு அவளைக் கொன்றவன் (பாம்பு) செத்து ஆறு நாள் ஆச்சு அவளைச் சுட்டவன் (மரம்) செத்து ஆறு மாசம் ஆச்சு" என்று சங்கேத பாஷையில் தெரிவித்தான்.

3

ஒரு புருஷனுக்கு ஒரு பெண்ணின் மேல் காதல் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளும் அவள் கடைவீதி வழியே போவாள். அப்பொழுதெல்லாம் அவள் நடையழகையும் உருவழகையும் பார்த்துப் பார்த்து மகிழ்வான்.அவள் தன்மேல் காதல் கொள்வாளோ மாட்டாளோ என்ற ஐயத்தால், சில காலம் இப்படி அவளேக் கண்டு களிப்பதோடு நின்றிருந்தான்.

அவள் கடைவீதி வழியே செல்லும்போது சிலநாள் அவளை அழைத்துக்கொண்டு ஒரு முதியவர் செல்வார். முதியவரானலும் முறுக்குத் தளராதவர். மார்பில் சந்தனம் பூசியிருப்பார். கையில் கைத்தடியும் மற்றொரு