பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கேத சம்பாஷணை 6字

ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு, ஒரு மர மாகிய கைத் தடியைப் பிடித்து, ஒரு மரமாகிய பனே யோலே விசிறியை வீசிக்கொண்டு செல்லும் தன் தகப்பனரை அவன் கவனித்திருக்கிருன் என்பதையும் உணர்ந்தாள். அவள் வீடு இருக்கும் இடத்தை அவன் கேட்கிருன் தனிமையிலே வந்து அவளேக்கண்டு அளவளா வத்தான் அப்படிக் கேட்கிருன் அப்படிச் செய்வதில் அவளுக்கு இணக்கம் உண்டென்பதை அவன் உணர வழி என்ன? அவள் தக்க பதில் சொன்னல் உணர்ந்து கொள்வான். அவள் விடை சொல்லுகிருள்.

பாலுக்கும் பானைக்கும் நடுவிலே ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே என்று விடை கூறினள்.

அவளும் சங்கேதமாகவே பேசிளுள். அவள் வீடு பானே பண்ணும் குயவன் வீட்டுக்கும், பால் விற்கும் இடையன் வீட்டுக்கும் நடுவில், ஊசி பண்ணும் கொல்லன் விட்டுக்கும் நூலேப் பாவோடும் சேணியன் வீட்டுக்கும் அருகிலே இருக்கிறதென்பதைச் சொல்லி விட்டாள். அவனும் உணர்ந்து கொண்டான். மேலே அவன் கேள்வி போடுகிருன். Y.

நான் எப்போது வரலாம்?

அவள் உடனே ப தில் சொல்லுகிருள்.

இந்த ராஜா செத்து

அந்த ராஜா பட்டம் கட்டிக்கொண்டு . . . . . மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர். - ... * * சூரியன் அஸ்தமித்துச் சந்திரன் உதயமான பிறகு வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சார்த்தும் பொழுது கதவு