பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கஞ்சியிலும் இன்பம்

கிலேயும் கதவும் சேர்ந்து விடும். அந்தச் சமயத்தில் நள் ளிரவிலே வருவாயாக என்று சங்கேதத்தால் தெரிவிக்கிருள் காதலி. -

சங்கேத சம்பாஷணை முடிகிறது. இனி பேச்சு எதற்கு?

4 ஒரு பிராமணர் ஒரு மகனைப் பெற்று வைத்துவிட்டுக் காசிக்குப் போனர். காசியிலேயே மனம் பற்றிவிட்டதனல் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டார். பிறகு தாம் பிறந்த காட்டையும் ஊரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் புறப்பட்டு வந்தார். தம் ஊருக்கு வந்து பார்த்தபோது அவருக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. எல் லாம் புது முகங்களாக இருந்தன. அவர் இருந்த வீடு இடிந்து போய் அந்த மனே யார் கைக்கோ மாறி விட்டது. அவருடைய மனேவி இறந்து விட்டாளென்றும் தெரிந்து கொண்டார். ஆல்ை மகன் என்ன ஆன்ை என்பதைக் சொல்வார் இல்லை. -

தாய் காட்டை மிதித்தவுடன் அவருக்கு, "இனி இங்கேயே வசிக்க வேண்டும்" என்ற விருப்பம் எழுந்தது. தனி மனிதராக வாழ்வது கஷ்டம். ஆகையால் யாரேனும் ஒர் ஏழைப் பிராமணனுடைய பெண்ணேக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழலாம். என்று தீர்மானம் செய்தார். அவருக்குச் சற்றேறக்குறைய அறுபது வயசு இருக்கலாம். ஆலுைம் உடம்பு தளர.

தமக்குப் பெண் கொடுப்பார் உண்டா என்று தேடிக் கொண்டு புறப்பட்டார் அந்தப் பிராமணர் பல கிராமங் களுக்குச் சென்றும் தம் கருத்து நிறைவேருமல் கம்பிக்கை இழக்குக் தருணத்தில் இருந்தார். அப்போது அவருக்கு

கம்பிக்கை உதயமாகும்படியான சக்தர்ப்பம் நேர்ந்தது.