பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாமியாரும் மருமகளும்

இந்த நாட்டில் மாமியார் மருமகள் சண்டை யென் பது மனித சமுதாயம் உண்டான நாளிலிருந்தே ஏற்பட் டிருக்க வேண்டும் போலும் பல நூற்ருண்டுகளுக்கு முன்னும் அதே கிலே, இன்றும் அதே கிலே இருக்கிறது என்ருல் கம்முடைய சமுதாய வாழ்விலே புரையோடிப் போன புண் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். -

இரண்டாயிர வருஷங்களுக்கு முன் தமிழில் உண் டான நூல் வரிசைகளுள் காலடியார் என்ற திே நூல் ஒன்று. ஜைன முனிவர்களால் இயற்றப்பட்ட 400 பாடல் களே உடையது. அதில் ஒரு பாட்டு வருகிறது. உலகில் அறிவுடையவனிடம் செல்வம் இருப்பதில்லை; செல்வம் உள்ளவனிடம் அறிவு இருப்பதில்லை. இரண்டும் சேர்ந்து ஓரிடத்தில் மிகவும் அருமையாகத்தான் இருக்கின்றன. இந்த விஷயத்தைப் புலவர்கள் அன்றும் சொல்லியிருக் கிருர்கள். இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிருேம். அன்று புலவனென்றும் மன்னனென்றும் இரண்டு சாதி யைப் பிரித்துச் சொன்னர்கள். இன்று எழுத்தாள னென்றும் முத்லாளியென்றும் பிரித்துச் சொல்லுகிருர்கள். செல்வமும் கல்வியும் ஒன்று சேராததற்கு ஜைன் முனிவர். இந்த காட்டுச் சம்பிரதாயத்துக்குப் பொருத்த மான காரணம் ஒன்றைக் கண்டு பிடித்தார். கல்விக்குக் கடவுளாக நாமகளேக் கொண்டாடுகிருேம். அப்படியே செல்வத்திற்குத் தெய்வமாக மகா லக்மியை வைத்துப் போற்றுகிருேம். மகாலகடிமி திருமாலின் தேவி. காமகள்