பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 கஞ்சியிலும் இன்டம்

பிரமதேவன் பத்தினி. திருமாலுக்குப் பிரமதேவன் பிள்க்ள முறையுடையவன். ஆகையால் திருமகளுக்கு காமிகள் மருமகள் ஆகவேண்டும். மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த நாட்டில் ஒற்றுமை இருக்கலாமா ? சம்பிரதாய விரோதம் அல்லவா? ஆகையால் எங்கெங்கே மாமியாராகிய திருமகள் உறைகிருளோ அங்கெல்லாம் மருமகளாகிய நாமகள் தலைகாட்ட நாணுவாளாம். காமகள் வந்து ஆக்கிரமித்து விட்டாள் என்று தெரிந்தால் திருமகள் மெல்ல நழுவி விடுவாளாம். -

நாவின் கிழத்தி உறைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து - என்று புலவர் சொல்கிருர். காவின் கிழத்தி-கலைமகள். பூவின் கிழத்தி-திருமகள் புலந்து-கோபித்து

இலக்கியத்தில் இப்படி இலை மறைவு காய் மறைவாக உள்ள விஷயம் வாழ்க்கையில் வெளிப்படையாக இருக்கி றது. மாமியாருடைய கொடுமைக்கு ஆளான பேதை மருமகள் தான் மாமியார் ஆகும்போது பழைய கஷ்டங் களே மறந்து போகிருள். அந்தப் பதவிக்கென்று தனியாக அமைந்துள்ள அதிகாரமும், பொருமையும், கலகமிடும் குணமும், புறங் கூறுவதும் எப்படியோ அவளிடம் வந்து சேர்ந்துவிடுகின்றன. -

வாழ்க்கையில் உள்ள செய்திகளே உள்ளபடியே எடுத்துக் காட்டுவது நாடோடி இலக்கியம். வாழ்க்கை அநுபவத்தின் சாரமென்று சொல்லத் தகும் பழமொழி களிலும், நாடோடிப் பாடல்களிலும், நாடோடிக் கதை களிலும் மாமியாரின் திருவிகளயாடல்களே ஆயிரம் வகை களில் கேட்கிருேம் மாமியார் மருமகள் யுத்தத்தைப்பற்றி வழங்கும் செய்திகளேயெல்லாம் ஒன்ருகத் திரட்டி வகுத்து அமைத்தால் அது பெரிய பாரதக் கதையைப்போல ஆகிவிடும் - - -