பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாழியாதும் மருமகளும் 73

'மாமியார் மெச்சின மருமகள் இல்லே' என்றும், 'மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்' என்றும், "வர வர மாமியார் கழுதைபோல் ஆளுள்' என்றும் வரும் பழமொழிகளுக்கு உதாரணமாக வழங்கும் கதைகள் ஒன்றல்ல. இரண்டல்ல.

★ - ஒரு வீட்டில் மாமியார் காலேயில் ஆற்றுக்கு நீராடப்

போயிருந்தாள். அப்பொழுது பிச்சைக்காரன் ஒருவன் அந்த வீட்டிற்குப் பிச்சை கேட்க வந்தான். உள்ளே இருந்த மருமகள், 'பிச்சை இல்லை, போ” என்று சொல்லி விட்டாள். அவன் முணுமுணுத்துக்கொண்டே போய் விட்டான். போகும்போது அவனுக்கு எதிரே மாமியார் ஆற்றிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

முணுமுணுத்துக் கொண்டே போன பிச்சைக் காரனேக் கண்டதும், "ஏன் அப்பா முணுமுணுக்கிருய்' என்று மாமியார் கேட்டாள். -

" அதோ, அந்த வீட்டுக்குப் போய்ப் பிச்சை கேட் டேன்; இல்லையென்று வீட்டுக்கார அம்மாள் சொல்லி விட்டாள். முதல் முதலில் இல்லையென்ற வார்த்தையை இன்று கேட்டேன்” என்று சொன்னன்.

வீட்டுக்கார அம்மாளா? அது யார்?' என்று மாமியார் உரத்துக் கேட்டாள். .

“ அதுதான் அம்மா, அந்த வீட்டு அம்மாள்” என்று குறிப்பினால் அவன் புலப்படுத்தினன். - -

" அப்படியா, சங்கதி! இக்தா, என்னுடன் வா" என்று மாமியார் அவனிடம் சொன்னாள். அவன், 'நல்ல வேளே! நமக்கு ஏதாவது கிடைக்கும் என்ற ஆசையோடு, போனன். - - -

மாமியார் நேரே வீட்டுக்குள் போனவள் உள்ளே போய்க் குடத்தை இறக்கி வைத்து விட்டு, மருமகளிடம்