பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 கஞ்சியிலும் இன்பம்

போட்டபணி போதுங்காண்;

புதுப்பணி வேண்டாங்காண்;

இட்டபணி போதுங்காண்;

இனிப்பணி வேண்டாங்காண்

என்று விடை பகர்கிருள். அப்படியானல் இவள் எதற்காக வருந்துகிருள்? ஒருகால் தாய் தகப்பருைடைய ஞாபகம் வந்து விட்டதோ? சிறு பெண் தானே? என்ற யோசனையின்மேல் அவன் மறுபடியும் கேட்கிருன்:

தாயாரின் வீட்டுக்குப்

போகப் பிரியமுண்டோ? அண்ணன்மார் வீட்டுக்குப் . போகப் பிரியமுண்டோ? இதற்கும் 'இல்லை” என்று பதில் வருகிறது.

தாயாசின் வீட்டுக்குப்

போகப் பிரியம்இல்லை; அண்ணன்மார் வீட்டுக்குப் போகப் பிரியம்இல்லை.

'பின்னே, இவ்வாறு அழுவதற்குக் காரணம் என்ன?” என்று அவன் வற்புறுத்தவே, அந்த மங்கை கல்லாள் உள்ள செய்தியை எடுத்துச் சொல்லத் தொடங்குகிருள்:

மாமியார் காச்சுவது. - மட்டிருக்கப் போவதில்லை; நாத்தளுர் காச்சுவது .

நடுவிருக்கப் போவதில்லை; கொழுந்தியார் காச்சுவது

கூடவிருக்கப் போவதின்க: ஒர்ப்படியாள் காச்சுவது

ஒத்திருக்கப் போவதில்லை;