பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கஞ்சியிலும் இன்பம்

தனையோ பேர். கரும்புத் தோட்டத்திலே கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்தும் மெல்லியலா ரெல்லாம் கங்காணிக் கூட்டத்தாலும், காதலர் கூட்டத்தாலும் வஞ்சிக்கப்பட்ட மடமாதர்களே. சோற்றுக்கும் துணிக்கும், நகைக்கும் நட்டுக்கும் ஆசைப்பட்டுத் தம்முடைய நிலை குலைந்த ஏழை மங்கையர்கள் துயரத்தைக் காற்றுத்தான் முற்றக் கேட்டிருக்கும்; கவிஞரும் கேட்டிருப்பார். நாடோடிக் கவிஞனும் கேட்டிருக்கிறான்.

வெள்ளைக்காரன் ஒரு தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தான். அதில் ஒரு வேலைக்காரனைக் கொண்டு வெள்ளரிக்காய் போடச் சொன்னன். வெள்ளரிக்காயைத் தாகந் தீர்க்கக் கொடுக்கிறது வழக்கமே ஒழிய விற்கிறதில்லை. ஆனால் வியாபாரமே குறியாக உடைய வெள்ளைக்காரன் அந்தக் காய்களைக் காசுக்கு இரண்டாக விற்கச் சொல்லிக் காகிதம் போட்டான்.

வேலைக்காரனுடைய மகள் வீராயி. அவள் வெள்ளரித் தோட்டத்தைப் பாதுகாத்துத் தண்ணீன் பாய்ச்சிப் பயிர் செய்த தன் தகப்பனுடன் இருந்து உழைத்தவள். தினை புனத்தைக் காத்த வள்ளியம்மையைப் போல வெள்ளரித் தோட்டத்தை வீராயி காத்தாள். வெள்ளரிக்காய் விளைந்தது. விற்றுப் பணம் சேர்த்து வைத்திருந்தான், அவள் தகப்பன்.

வெள்ளைக்காரன் வந்தான். வெள்ளரிக்காய் விற்ற பணத்தைத் தோட்டக்காரன் எஜமான் காலடியில் கொண்டு வைத்தான். தோட்டத்து எஜமானப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் மறைவிலிருந்து வீராயி தலையை நீட்டினாள். தளதளவென்றிருந்த அவள் பருவ அழகு வெள்ளைக்காரன் கண்ணைப் பறித்தது. உள்ளத்தைக் கொள்ள கொண்டது. வெள்ளரி, விற்ற பணம்