பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கஞ்சியிலும் இன்பம்

ஒரு மெல்லியலாள். இளம்பருவப் பாவை, ஒரு காளையிளங் கட்டழகனுக்கு வாழ்க்கைப்படப் போவதாகக் கனவு கண்டுகொண் டிருந்தாள். வெற்பையிடிக்குக் திற லுட்ைய திண்டோள் வீரன் ஒருவனுக்கு மாலேயிட்டு வாழ்க்கையிலே சுவர்க்க இன்பத்தைக் காணவேண்டு மென்று அவள் கினேத்தாள். ஆனல் விதி வேறு விதமாக இருந்தது. அவள் தகப்பனும் தாயும் சேர்ந்து வஞ்சம் செய்துவிட்டார்கள். தந்திரமாகச் சதி செய்து அவள் கனவைக் கலைத்து இன்ப மாளிகையைத் தகர்த்து அவளேப் புழுதியிலே கிடக்க வைத்தார்கள். -

பல்லில்லாத கிழவன் ஒருத்தனுக்கு அவளே விற்று விட்டார்கள். அவளே, 'முருங்கைக்கீரை பறித்து வா" என்று அன்று அனுப்பினர்கள். முள்ளில்லாக் காட்டில் முருங்கைக்கீரை பறிக்கப் போய் கெடுநேரம் அவள் பறித் தாள். அதற்குள் கிழவன் அவள் வீட்டிற்கு வந்து பரிசம் போட்டுக் கல்யாணத்தை கிச்சயம் செய்துகொண்டு போய் விட்டான். - - -

முருங்கைக்கீரையுடன் புகுந்த முத்துப் போன்ற அந்த இள நங்கைக்கு, "உனக்கு அடுத்த மாசம் கண்ணு லம்; உன் புருசன் அடுத்த வீட்டுக்காரன்" என்ற வார்த் தைகள் காதில் விழுந்தன. முருங்கைக் கொப்பைப்போல அவள் மனம் முறிந்துவிட்டது. -

தாய்தகப்பனுக்கு அடங்கின. பெண்ணுகையால் கிழ வனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளே, "ஏனம்மா வாழ்க் கைப்பட்டாய்?" என்று கேட்டால் அவள் என்ன சொல் கிருள் ? கேளுங்கள்: " . *

தக்காளித் தக்காளித்

தையல்முத்தே ! கிழவனுக் கேண்டி

வாழ்க்கைப் பட்டாய் !