பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் களியாட்டம்

பொங்கல் திருநாள் நிறைவுக்கும் புதுமைக்கும் அடை யாளம். 'பால் பொங்கிற்ரு ?" என்று கேட்டுச் செல்வம் பொங்கி நிறைந்த மகிழ்ச்சியைத் தெரிந்துகொள்ளும் திருநாள் இது. -

தொழிலாளிகளுக்கு ஓய்வு நாள் இது. இந்திய காட் டின் தலேமைத் தொழில் வேளாண்மை. உழுது பயிரிடும், குடிமக்கள் தங்கள் தொழிலில் வெற்றியைக் கண்டு குது. கலிக்கும் நல்ல நாள் தைப் பொங்கல். குயவன் புது மண் கலம் தருகிருன் புதுகெல்லேக் குத்திப் புது வெல்லத்தை யும் புதுப் பயற்றையும் கொண்டு புதுப்பால் கறந்து புதுப் பொங்கல் வைத்துப் புதுக்களிப்பில் மூழ்குவது தமிழர் வழக்கம்.

காடு கரைகளில் வேலே செய்யும் பெண்களுக்கு இது உல்லாசத் திருநாள் கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து குரவையிட்டுக் கும்மியடித்து ஆடிப் பாடிக் கொண்டாடும் பண்டிகை. . . . .

வாரிய தலையில் கொண்டையிட்டுப் பூவைச் செருகிப் புதுச்சேலே உடுத்து மடமங்கையர் புறப்படுவார்கள். ஆவா - ரம் பூவும் அரிசியும் கொண்ட பிரப்பங்கூடையை இடை யிலே இடுக்கிக்கொண்டு ஒருத்தி கூட்டத்தினருக்குத் தலைமை தாங்கி கடப்பாள். பண்ணைக்காரர் வீட்டிற்கும் மற்றச் செல்வர்கள் வீட்டிற்கும் சென்று அவர்கள் வீட்டு, வாயிலிலும் முற்றத்திலும் கூடையை நடுவில் வைத்துக் கொண்டான் அடிப்பார்கள். . .