பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் களியாட்டம் So

அவர்கள் கையைக் கொட்டிக் கும்மி அடித்துச் சுற்றிச் கற்றி வருவார்கள். அவர்கள் பாடும் பாட்டில் மிகவும் அபூர்வமான கருத்து இருக்குமென்று சொல்வதற்கில்லே. ஆளுல் அந்தப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக் கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினில் தாளம் இருக்கும். அவர்கள் குதித்துக் குதித்துப் பாடும் பாட்டில் துள்ளல் ஓசை இருக்கும்.

கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் இந்த வழக் கத்தைக் காணலாம். தமிழன்னையின் உடம்பு முழுவதும் ஒரே உயிர்தானே பரவியிருக்கிறது?

- ★ மார்கழி மாசத்தில் வைஷ்ணவர்கள் ஆண்டாள் அரு ளிய திருப்பாவையைப் பாடுவார்கள். பெண்களெல்லாம் சேர்ந்துகொண்டு திருமாலை வணங்குவதற்கு முன் நீராடப் போவதற்காக ஒருவரை ஒருவர் அழைப்பது போலச் சில பாடல்கள் அமைந்திருக்கும். திருவாசகத்திலும் திருவெம்பாவை' என்று ஒரு பகுதி இந்த மாதிரியே உண்டு. 'இன்னும் தாங்கிக்கொண் டிருக்கிருயே! நான்தான் முதலில் எழுந்து வந்து உன்னே எழுப்புகிறேன் பார் என்று நேற்று வீறு பேசினயே ! அந்தப் பேச்செல்லாம் இப்போது எங்கே போயிற்று?" என்று பெண்கள் சொல் லித் தம் தோழிகளை எழுப்புவதாகச் சில பாடல்கள் அதில்

வரும். - * -.

பழங்காலத்தில் தை மாதத்தில் பெண்கள் கூட்ட மாகக் கூடி நீராடி வரும் வழக்கம் இருந்தது. கன்னிப் பெண்கள் அதை விரதமாகவே கொண்டிருந்தனர். தைத் நீராடல், அம்பாலாடல் என்று அந்தப் புனிதச் செயலேப் பழைய இலக்கியங்கள் குறிக்கின்றன. -

நாகரிக வாழ்க்கையில் விளங்கும் காசிமணிகள் கடவு ளேத் தொழுவதற்கு முன்னே ஒருவரை ஒருவர் எழுப்பிக்