பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கஞ்சியிலும் இன்பம்

கூட்டம் கூடுவார்கள். தைப் பொங்கலில் அவர்கள் கூடு வதற்குத் தைக்ரோடுதல் காரணம். உழுதொழிலும் கூலி வேலையும் வாழ்க்கைப் பணியாகக் கொண்ட மங்கையருக் குத் தைக்ரோட்டு உண்டோ என்னவோ, தெரியாது. ஆனால், தைப் பொங்கல் உண்டு. அவர்களும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கூடுவார்கள்.

மார்கழி தை மாதங்களில் இலங்தைப் பழம் பழக் கும். ஆற்றங்கரையில் உள்ள படுகைகளிலும் காடுகளிலும் இயற்கையாக இலக்தமரங்கள் வளர்ந்திருக்கும். சிறுவரும் சிறுமியரும் ஏழை மக்களும் காலேயில் எழுந்து சென்று, அந்தப் பழத்தைப் பொறுக்கி வருவார்கள். ஏழைப் பெண்மணிகள் அதைக் கூறு கட்டி வைத்து விற்பதும் உண்டு. - .

இலங்தைப் பழம் பொறுக்குவதே நாலு பேர் கூடிச் செய்தால் விளையாட்டாகி விடுகிறது. தை மாதத்தில் கும்.மியடிக்கும் பெண்களுக்கு இலங்தைப் பழம் பொறுக் கும் உற்சாகம் உண்டாகிறது. அதன் பொருட்டு ஒன் வொருத்தியும் தன் தோழியை அழைக்கிருள்.

பொங்கல் பாட்டு இலங்தை பொறுக்கும் அழைப்பில் ஆரம்பிக்கிறது. பிறகு புடைவையைப்பற்றிச் சொல் கிறது. ஏழைப்பெண் நல்ல புடைவை யென்று ஒன்றைப் பாதுகாத்து வைக்கிருள். அதை இன்று எடுத்துக் கட்டிக் கொள்ளலாம் என்று கினேக்கிருள். போட்டு மடித்துப் ப்ெட்டியிலே வைத்த அதைப்பற்றிப் பாட்டு ஞாபகப்

படுத்துகிறது.

அம்மாயி! அம்மாயி !

ஏண்டி ஏண்டி அம்மாயி1 ஏக்கமா இருக்கயா

அாக்கமா இருக்கயா ?