பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தின்றதால் அதன் உடம்பில் ஒரு புதிய தெம்பு கூட வந்துவிட்டது.

இப்படிக் கழுதையும் குதிரையும் காட்டில் புகுந்து இருட்டு நேரம் வருவதைக்கூட நினைக்காமல் பேசிக்கொண்டே மேய்ந்தன. அந்தச் சமயத்தில் ஒரு புலி அங்கு வந்தது. அது. முன்னால் கடக்கிட்டி முடக்கிட்டி விரட்டி அடித்த புலி அல்ல. இது வேறு ஒரு புலி. ஆனால், புலிகளுக்கெல்லாம் இயல்பாக இருக்கும் சந்தேகம் அந்தப் புலிக்கும் இருந்தது.

அந்தப் புலி, குதிரையையும் பார்த்ததில்லை; கழுதையையும் பார்த்ததில்லை. பச்சை சிவப்பு வர்ணம் கொண்ட ஒரு விலங்கை அது பார்த்ததே கிடையாது. கிழவன் அன்று காலையில்தான் புதிதாகச் சாயம் பூசி இருந்தான்.

அதனால் புலிக்குப் பெரிய சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்த விலங்குகள் தன்னை விடப் பலமுள்ளவைகளாக இருந்தால் என்ன செய்வது? பலமுள்ளவையாக இல்லாவிட்டால் இப்படிப் பயமின்றிக் காட்டில் பேசிக்கொண்டே இருக்குமா ? இவற்றின்மேல் பாய்ந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ?’ என்று இவ்வாறு மனத்தைக் குழப்பிக்கொண்டே பதுங்கிப் பதுங்கி வந்தது.

அந்தச் சமயத்தில் கடக்கிட்டி முடக்கிட்டி புலியைப் பார்த்து விட்டது. ‘புதிய நண்பன் கிடைத்த மகிழ்ச்சியால் காட்டிற்குள் அதிகத்